புத்தாண்டில் குறைந்த முதலீட்டில் விவசாயம் தொடர்பான வணிகம் செய்ய சிந்திக்கிறீர்கள் என்றால், நீங்கள் உரம், விதை அல்லது பூச்சி உரம் கடையைத் திறக்கலாம். இது எப்போதும் லாபம் கொடுக்க வல்ல வணிகமாகும், இதில் உங்களுக்கு அதிக முதலீடு தேவையில்லை. நீங்கள் எந்த பட்ட படிப்பும் இல்லாமல் கூட இந்த உரிமத்தைப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு கீழே படிக்கவும்
உரக் கடையைத் திறப்பதற்கான முழு செயல்முறை பற்றி விரிவாகப் பார்ப்போம். இதனுடன், விதை மற்றும் உர விற்பனை உரிமத்திற்கு நீங்கள் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் மற்றும் அதற்கு நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதையும் பார்ப்போம்.
உரிம விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
- உர விற்பனைக்கான சில்லறை விற்பனை உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மொத்த விற்பனை உரிமத்திற்கான விண்ணப்பக் கட்டணம் 2250 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- விற்பனை உரிமத்திற்கான கட்டணம் 1000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- உரிமம் புதுப்பிப்பதற்கான கட்டணம் 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உரம் மற்றும் விதைகளை விற்க உரிமம் பெறுவது எப்படி?
- உரிமத்தைப் பெறுவதற்கு, முதலில் விவசாயத் துறையின் DBT இணையத்தளத்திற்குச் சென்று உங்கள் ஆதார் அட்டை எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
- பின்னர் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (http://upagriculture.com/) சென்று விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்பவும்.
- அதன் பிறகு, தேவையான அனைத்து ஆவணங்களையும் போபைல் மூலமோ அல்லது ஸ்கேனர் வைத்தோ, ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.
- விண்ணப்பம் முடிந்ததும், அதன் நகலை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
- பின்னர் அந்த கடின நகலை ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.
- அதன்பிறகு துறை ஆவணங்களை சரிபார்க்கும் பணிகளை தொடங்கும்.
பின்னர் சமர்ப்பித்த ஆவணங்கள் அடிப்படையில், ஒரு மாதத்திற்குள், விண்ணப்பதாரர் உரிமத்தைப் பெறுவார்.
கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்!
PM Kisan தவணைத் தொகை- ஆன்லைனில் செக் பண்ணுவது எப்படி?
பட்டப்படிப்பு இல்லாதவர்கள் எவ்வாறு விண்ணப்பித்தல் வேண்டும்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களும் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். முதலில் வேளாண் துறையிடம் 15 நாட்கள் பயிற்சி பெற வேண்டும்.
விதை மற்றும் உரம் விற்பனை உரிமத்திற்கான தகுதி
இதற்கு விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், இதில் மாநில, மத்திய, வாரியம் அல்லது நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியரின் அதிகபட்ச வயது வரம்பு 65 ஆக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: