1. விவசாய தகவல்கள்

PM Kisan தவணைத் தொகை- ஆன்லைனில் செக் பண்ணுவது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
PM Kisan Installment - How to make a check online?

விவசாயிகளுக்கான மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் 11-து தவணையை அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது. இதன்படித் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 2,000 ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளது. நம் கணக்கில் இந்தத் தொகை வரவு வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை பின்வரும் முறைப்படித் தெரிந்து கொள்ளலாம்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையிலும், நிதிச்சுமையை அவர்கள் எதிர்கொள்ள உதவும் விதமாகவும் மத்திய அரசு பலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்றுதான் PM-kisan திட்டம்.

ரூ.6000 நிதி

மத்திய அரசு சார்பாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயிகளுக்கு ஒரு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் என மொத்தம் மூன்று தவணைகள் ஒரு ஆண்டில் கிடைக்கின்றன.

அடுத்த தவணை

பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரையில் 10 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. அடுத்து 11ஆவது தவணை மே 31ஆம் தேதி விவசாயிகளின் கணக்கில் வரவிருக்கிறது.

இந்த நிதிக்காக காத்திருக்கும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரு நல்ல செய்தி. ஏன்னவென்றால், இந்தத் திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் PM Kisan eKYC க்கான காலக்கெடு மே 31, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பிரதம மந்திரி கிசான் (PM Kisan) இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வழங்கப்பட்ட 10வது தவணையை 11 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கில் பெற்றுள்ளனர். சரி, நம் கணக்கில் 11-வது தவணைத் தொகை வரவு வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

செக் செய்ய

  • பிரதம மந்திரி கிசான் (PM Kisan eKYC) செயல்முறையை எப்படி முடிப்பது?

  •  நீங்கள் முதலில் PM Kisan அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://pmkisan.gov.in/ இல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.

  • பின்னர் நீங்கள் Farmer’s Corner என்பதற்கு செல்ல வேண்டும். பிரிவின் கீழ், நீங்கள் eKYC ‘விருப்பத்தைக்’ காண்பீர்கள்.

  •  OTP அடிப்படையிலான eKYC செயல்முறையை முடிக்க உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளிட வேண்டும்.

  • OTP அடிப்படையிலான eKYC PMKISAN போர்ட்டலில் கிடைக்கிறது என்று பிரதம மந்திரி கிசானின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு ரூ.5 லட்சத்தில் விபத்துக் காப்பீடு- அரசு அறிவிப்பு!

ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

English Summary: PM Kisan Installment - How to make a check online? Published on: 27 May 2022, 04:46 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.