கோடை வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டதால், தமிழகம் முழுவதும், மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது.
கொளுத்தும் வெயில் (The burning sun)
தமிழகத்தில் மார்ச்,ஏப்ரல், மே மாதங்களில், கோடை காலம் சக்கைபோடு போடும். இந்த ஆண்டு பிப்ரவரியிலேயே சூரியன் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. நாள்தோறும், வெப்பத்தில் உக்கிரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
மண்பானை விற்பனை (Sale of Pots)
இதன்காரணமாக வெயிலுக்கு உகந்த ஆடைகள், பொருட்களை வாங்கிக் குவிப்பதில், மக்கள் ஆர்வம் காட்டத்தொடங்கிவிட்டனர்.குறிப்பாக உடல் ஆரோக்கியத்திற்கு எந்தவிதத்தில் ஊறு விளைவிக்காத, முழுமையான குளுமையைத் தரும் மண்பானை விற்பனை தற்போதே அதிகரித்துள்ளது.
வெப்பம் அதிகரிப்பு (Increase in heat)
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்பகுதியில், கோடை வெயிலின் தாக்கம் முன்னதாகவே துவங்கியுள்ளது.
பயன்பாடு அதிகரிப்பு (Increase in usage)
வடகிழக்கு பருவமழை சீசன், வழக்கத்தை விடக் கூடுதல் வாரங்கள் நீடித்தது. அதன் பின்னர், வெயிலின் தாக்கம் கூடுதலாகியுள்ளது. தற்போது அதிகரித்துள்ள கோடை வெயிலிருந்து தப்பிக்க வீடுகளில் மண்பானையில், தண்ணீர் நிரப்பி பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர், இவ்வகை பானைகள் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
நல்ல விலை (Good price)
பல்வேறு கிராமங்களில், இவ்வகை பானைகளை, மண்பாண்டத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்கின்றனர். அவற்றில், காலத்துக் கேற்ப பல்வேறு மாறுதல்களும் செய்யப்பட்டு, நகரப்பகுதியில் ரூ.200 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. மண்பானை விற்பனை அதிகரிப்பு, மண்பாண்டத் தொழிலாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
மண்பானையின் சிறப்பு (Specialty)
தம்மைச்சுற்றியுள்ள சீதோஷணநிலையை மாற்றி உள்வாங்கிக்கொள்ளும் தன்னை, மண்பானைக்கு உண்டு என்பதால், மண்பானையில் தண்ணீர் சேகரித்து வைத்து, பருகுவது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
தனிச்சுவை (Loneliness)
அது மட்டுமல்ல, மண்பானையில் தயாரிக்கப்படும் உணவுகளுக்குத் தனிச்சுவை உண்டு என்பதாலும் மக்கள் இந்த பானைகளை அதிகளவில் வாங்கி சமைத்து ருசிக்கின்றனர்.
அதிலும் கோடை வெயிலைத் தவிர்க்க, மண்பானையில் தண்ணீர் சேகரித்துக் குடிப்பது, சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பது, மோர் சேகரித்தல் உள்ளிட்டவை நம் உடலுக்கு நல்லது.
மேலும் படிக்க...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சாப்பிடுங்கள்!
பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!