Farm Info

Sunday, 10 July 2022 09:00 AM , by: Elavarse Sivakumar

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அடுமனைப் பொருட்கள் மற்றும் மிட்டாய்கள் தயாரிப்பு குறித்த 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. விருப்ப முள்ளவர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு, பல்கலைக்கழக துணைவேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், விவசாயிகளுக்கு புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்துதல், அறுவடையின்போது எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல் என பல்வேறு வழிகாட்டுதலை அளித்து வருவதுடன், தொழில் முனைவோராக வேண்டும் என்ற கனவு கொண்டவர்களுக்கு அவ்வப்போது பயிற்சி அளித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும்12 மற்றும் 13ம் தேதிகளில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

வரவேற்பு

அடுமனைஉணவுப் பொருட்கள், சாக்லேட் மற்றும் மிட்டாய் வகைகளுக்கு தற்பொழுது மக்கள் பகுதியில், அதிக வரவேற்பு உள்ளது. அதற்கான முக்கியக் காரணம் விரும்பத்தக்க வகையிலும் சுவைகளிலும் மிக எளிதில் இவை கிடைப்பதேயாகும். இந்தப்பயிற்சி சிறு தொழில்முனைவோருக்கு தங்களது வருமானத்தைப் பெருக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே, பயிற்சியின்போது கீழ்க்காணும் அடுமனைப் பொருட்கள், சாக்லேட் மற்றும் மிட்டாய் வகைகள் எளிய முறையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

ரொட்டி வகைகள்
கேக் மற்றும் பிஸ்கட்
சாக்லேட்
கடலை மிட்டாய்
சர்க்கரை மிட்டாய் வகைகள்

இத்தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மற்றும் ரளைய ஆர்வலர்கள் ரூ.1,500.00+ 8% GST செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்சி நடைபெறும் இடம்

அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் / 641003

பேருந்து நிறுத்தம்

வாயில் எண்7, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641003

கூடுதல் விபரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் / 641003 என்ற முகவரியிலும், 0422/6611268 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

33 மாத சம்பளம் ரூ.24 லட்சத்தை திருப்பிக்கெடுத்த மனசாட்சியுள்ள ஆசிரியர்!

அடுத்த வாரம் குறைகிறது சமையல் எண்ணெய் விலை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)