விவசாயத்தில் புரட்சி என்று கருதப்பட்ட நைட்ரஜன் உரங்களின் அறிமுகம் வந்த பிறகு பயிர்கள் நன்றாக செழித்து பச்சைபசேல் என வந்தது. அதற்காகவே விவசாயிகள் போட்டி போட்டிக் கொண்டு தழைசத்து உரங்களான யூரியாவினை நிலத்தில் இட்டு வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம் என குறிப்பிட்ட வேளாண் ஆலோசகர் அக்ரி.சு.சந்திரசேகரன் இதுப்போன்ற இரசாயன உரங்களின் பயன்பாடு எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனையும் கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார்.
பயறுவகை தாவரங்களில் இயற்கையாகவே வேர் மூடிச்சுகளில் உள்ள நுண்ணுயிர்கள் வளிமண்டல நைட்ரஜனை (78%) கிரகித்து தாவரங்களுக்கு கொடுக்கும். இதை பார்த்தே தான் தாவரங்களுக்கு நைட்ரஜன் உரங்கள் உருவாக்க பட்டது என்றால் வியப்பாக உள்ளதல்லவா ? என கேள்வி எழுப்பிய அக்ரி சு.சந்திரசேகரன் மேற்கொண்டு தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு-
உரத்தின் பயன்பாடு என்ன?
தாவரங்களின் வளர்ச்சிக்கும், ஒளிச்சேர்க்கை நிகழ்வுக்கு முதன்மை காரணியாக விளங்கும் பச்சையம் உருவாக்க உரங்கள் உதவுகின்றன. இதனால் உணவு உற்பத்தி அதிகமாக பெருகிறது என்றால் மிகையல்ல.
உரத்தால் ஏற்படும் மாசு:
இந்த உரங்கள் அதிகளவில் பயன்படுத்தும் போது வளிமண்டலத்தில் நைட்ரஸ் ஆக்சைடு அதிகமாக உற்பத்தியாகி சுற்றுப்புறத்தை மாசு படுத்துவதை விட அதிக வெப்ப நிலையை உருவாக்கிட காரணமாக உள்ளன.
இந்த மாசுபட்டிற்கு காரணமாக திகழும் நாடுகள் சீனா, இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா போன்றவை தான். இதற்கு அப்படியே நேர்மாறாக ஐரோப்பியா நாடுகள் தற்போது வெப்ப உமிழ்வை கணிசமாக குறைத்துள்ளன. பசுமை இல்லா வாயுக்கள் (கரியமில வாயு) CO₂ தான் பூவி வெப்ப மயமாதலுக்கு காரணம் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் அதைவிட மிகவும் மோசமானது தான் இந்த நைட்ரஸ் ஆக்சைடு. இது அதைவிட 300 மடங்கு மோசமானது என, சமீபத்திய ஆஸ்திரேலியாவை சேர்ந்த " சிஸிரோ " (CSIRO) விஞ்ஞான மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாயு ஒசோன் படலத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. 1980-ல் இருந்ததை விட தற்போது 40% அதிகமாக அதிகரித்துள்ளது என வெளியாகியுள்ள செய்தி கவலைக்குரிய விஷயமாகும்.
உலகில் மொத்த நைட்ரஸ் ஆக்சைடு உமிழ்வில் (EMISSIONS) அதிக அளவாக பயன்படுத்தும் நைட்ரஜன் உரங்கள், விலங்கு கழிவுகள் ஆகியவை சேர்ந்து ஏற்படும் உமிழ்வு 74%- ஆகும். இது தவிர கழிவுநீர், தொழிற்சாலை கழிவுகள், புதைபடிவ எரிபொருள் ஆகியவையும் இந்த வெப்ப நிலையை அதிகரிக்கும் காரணியாக உள்ளன.
Read also: ஏக்கருக்கு ரூ.730- பயிர் காப்பீடு தொடர்பாக விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
வெப்பநிலையை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
1) மண் மாதிரி எடுத்து மண் பரிசோதனை முடிவின் பரிந்துரைக்கேற்ப உரமிடல் வேண்டும்.
- இரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களான பசுந்தாள், பசுந்தழை மற்றும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், நீலபச்சை பாசி, அசோலா போன்றவற்றை பயன்படுத்தலாம்.
- தழைச்சத்து (N) மண்ணில் இடுவதை விட இலைவழித் தெளிப்பாக செய்வதால் பாதிப்பு குறையும். மண்வளமும் காக்கப்படும்.
- மாட்டு எரு, ஆட்டு எரு, மக்கிய குப்பைகளை அடியுரமாக பயன்படுத்தலாம்.
உணவு உற்பத்தி பாதிக்கப்படாமல் இந்த நைட்ரஸ் வாயுஉமிழ்வை எப்படி கட்டுப்படுத்துவது என விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். நாமும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பத்தையும், உரங்களால் உண்டாகும் வெப்பநிலையை கட்டுக்குள் வைக்க முயற்சிப்போம். என வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
(மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள்/ முரண்கள் இருப்பின் வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திரசேகரன் அவர்களைத் பின்வரும் எண்ணில் தொடர்புக்கொள்ளவும் (ph: 94435 70289)
Read more:
TNAU துணைவேந்தருக்கு கெளரவ கர்னல் பதவி வழங்கியதில் இருக்கும் சிறப்பம்சம் என்ன?
நெற்பயிர் வரப்புகளில் பயறு வகை- விதைப்பது எப்படி? என்ன நன்மை?