1. செய்திகள்

ஏக்கருக்கு ரூ.730- பயிர் காப்பீடு தொடர்பாக விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
PMFBY- Thanjavur district

தஞ்சாவூர் மாவட்டத்தினை சேர்ந்த விவசாயிகள் வருகிற ஜூலை 31 க்குள் நெற்பயிருக்கான காப்பீடு செய்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் பிரிமீயம் தொகை, காப்பீடு நிறுவனம் எது? போன்ற தகவல்கள் விரிவாக இடம்பெற்றுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களின் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2020 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டில், காரீப் சிறப்பு பருவத்தில் நெல் 1 பயிருக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் 775 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பயிர் காப்பீடு முழு விவரம்:

  • பயிர்- நெல் 1
  • பயிர் காப்பீட்டுத் தொகை (ஏக்கர்) - ரூ. 36,500
  • விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை (ஏக்கர்)- ரூ.730
  • காப்பீடு செய்ய கடைசி தேதி- 07.2024

இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பெயரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று (பசலி 1434), வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஒளி நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

காப்பீடு செய்யும் போது தாங்கள் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து காப்பீடு செய்தபின் அதற்கான ரசீதை பொது சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

Read also: நெற்பயிர் வரப்புகளில் பயறு வகை- விதைப்பது எப்படி? என்ன நன்மை?

தஞ்சாவூர் I- க்கு உட்பட்ட பகுதிகள்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் கோடை பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்திட தஞ்சாவூர் I- க்கு ஷீமா (KSHEMA) பொது காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யபட்டுள்ளது. தஞ்சாவூர் I-ல் தஞ்சாவூர், (பூதலூர் மற்றும் கண்டியூர் பிர்கா தவிர), ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவசத்திரம் மற்றும் அம்மாபேட்டை (அய்யம்பேட்டை மற்றும் பாபநாசம் பிர்கா தவிர) ஆகிய வட்டாரங்கள் இதில் அடங்கும்.

தஞ்சாவூர் II- க்கு உட்பட்ட பகுதிகள்:

தஞ்சாவூர் II-க்கு அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட் (AICL) நிறுவனம் தேர்வு செய்யபட்டுள்ளது. தஞ்சாவூர் II-ல் தஞ்சாவூர் வட்டாரத்தில் பூதலூர் பிர்காவில் உள்ள சித்திரக்குடி கூடுதல், சித்திரக்குடி முதன்மை, மருதாக்குடி, ராயந்தூர் கிராமங்கள் மற்றும் கண்டியூர் பிர்காவில் உள்ள அரசூர் சின்ன அவுசாகிப் தோட்டம், கலிய பானு ராஜா தோட்டம், மனக்கரம்பை, நாகத்தி, ராஜேந்திரம், செங்களுநீர் தோட்டம் மற்றும் தென்பெரம்பூர் ஆகிய கிராமங்கள் இதில் அடங்கும்.

அம்மாபேட்டை வட்டாரத்தில் அய்யம்பேட்டை பிர்காவில் உள்ள அகரமாங்குடி, பெருமாக்க நல்லூர், பொரக்குடி, செருமாக்கநல்லூர், சுரைக்காயூர், வடக்கு மாங்குடி, வையச்சேரி, வேம்புகுடி ஆகிய கிராமங்களும் பாபநாசம் பிர்காவில் உள்ள தேவராயன்பேட்டை, மேலசெம்மங்குடி, பொன்மான் மேய்ந்தநல்லூர், புலிமங்கலம் மற்றும் திருவையாத்துக்குடி ஆகிய கிராமங்களும் மற்றும் பூதலூர், திருவையாறு, பாபநாசம் கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய வட்டாரங்களும் இதில் அடங்கும்.

எதிர்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை தாமதமின்றி உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் அனைவரும் பயனடையுமாறும், கடைசி நேர இன்னல்களை தவிர்த்திடுமாறும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Read more:

உருளைக்கிழங்கு சாகுபடிக்கான இடுபொருட்களுக்கு மானியம்- வேளாண் மானியக் கோரிக்கையில் அறிவிப்பு

நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண்

English Summary: PMFBY premium rupees 730 per acre for farmers regarding paddy crop insurance Published on: 26 June 2024, 04:32 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.