தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் உள்ள வயல் வெளிகளில் நெற்பயிரை நாசம் செய்யும் எலிகளிடமிருந்து பாதுகாக்க, இடுக்கி வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக உள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது, திருவள்ளூர், வேலூர், திருவண்ணமாலை, கடலூர், விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், கரூர், நாகபட்டினம், மதுரை, தேனி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், தர்மபுரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நெற்பயிர் சாகுபடி நடக்கிறது.
அந்த வகையில், தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராணத்தேவன்பட்டி, சாமாண்டிபுரம், ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நவம்பர் மாதம் இரண்டாம் போக சாகுபடி துவங்கியது. மேலும் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் இது தொடங்கியிருக்கும், எனவே அனைவரும் கவனிக்க வேண்டிய விஷயமாகும்
எலிகளை கட்டுப்படுத்த விவசாயிகளின் முயற்சி (Farmers' attempt to control rats)
தற்போது சுமார் 70 நாள் பயிர்களாக உள்ள நிலையில், இளம் நெற்பயிர்களை எலிகள் நாசம் செய்து வருவதால், பயிர்கள் வளர வழியின்றி கருகி வருகிறது, இதனால் பெருமளவு மகசூல் பாதிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு அதிகம் நஷ்டமும் ஏற்படுகிறது.
இதைத் தடுக்கும் பொருட்டு விவசாயிகள் வயல் வெளியில் திரியும் எலிகளை இடுக்கி வைத்துப் பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.
மூங்கிலால் செய்யப்பட்ட, இந்த இடுக்கிகளை பயிர்களுக்கு நடுவே ஊன்றி வைத்து விட்டு அதனை சுற்றியும் எலிகளுக்கு பிடித்த உணவாகிய அரிசி, நெல், நிலகடலை, பருப்பு, தேங்காய் ஆகியவற்றை கலந்து முதல் நாள் இரவு வைத்து விட்டு மறு நாள் பார்க்கும்போது வயல் வெளிகளில் உள்ள எலிகள் அனைத்தும் இடிக்கியில் சிக்குகிறது.
இதனால் பயிர்கள் பாதுகாப்பாக இருப்பதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில் தற்போது இளம் நெற்பயிர்களை எலிகள் கடித்து நாசம் செய்கின்றன. இதனை தவிர்க்கும் விதமாக எலி இடுக்கிகள் வாடகைக்கு வாங்கி வயல்களில் ஆங்காங்கே வைக்கப்படுகிறது.
இதில் எலிகள் சிக்கிக்கொள்கின்றன. இதனால் எலிகளால் பயிர்கள் நாசமாவது தவிர்க்கப்படும், எலிகளின் உற்பத்தி குறைந்தும் பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன என்கின்றனர், விவசாயிகள்.
வேளாண்மை துறையின் அறிவுறுத்தல் (Instruction of the Department of Agriculture)
வேளாண்மை துறை, நெற்கதிர் வெளிவரும் தருணத்தில் எலிகளை கட்டுப்படுத்த வறுத்த கம்பு மாவு, சோள மாவு, கேழ்வரகு மாவு மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றுடன் ஜிங் பாஸ்பைடு கலந்து தேங்காய் சிரட்டையில் எலிகள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதியில் வைத்தால், எலிகள் கட்டுப்படுத்தப்படும் என்கின்றனர்.
மேலும் படிக்க:
எலிகளால் ஏற்படும் பயிர் சேதங்கள்- எளிமையாகத் தடுக்கும் வழிகள்!
PM-KMY: திட்டத்தின் கீழ், ஓய்வு ஊதியம் பெற எவ்வாறு பதிவு செய்வது?