MFOI 2024 Road Show
  1. தோட்டக்கலை

இயற்கை வேளாண்மை பற்றிய ஓர் பார்வை: இயற்கை வேளாண்மையின் அவசியம் மற்றும் அதன் முறைகள்

KJ Staff
KJ Staff
Credit : Organic Farming

இன்று பெரும்பாலானோர் இயற்கை விவசாயம், இயற்கை உணவு என இயற்கையினை நோக்கி திரும்பி உள்ளனர். மாறி வரும் இயற்கையும், காலநிலையும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது எனலாம். இயற்கை வேளாண்மையின் (Organic Farming) அவசியத்தை உரக்க சொல்லி வருகிறார்கள் இயற்கை வேளாண்மை ஆய்வாளர்கள்.

இயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் தெரிந்து  கொள்வது மிக அவசியமாகும். ரசாயனம் கலந்த மண்ணை மாற்ற அவசியமானதாகவும் உள்ளது. இயற்கை வேளாண்மையில் நமக்கு எல்லா உயிரிங்களும் ஏதாவது ஒரு வகையில் நன்மையையே செய்கின்றன.

பஞ்ச பூதங்களையும் பாதிக்காமல் இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் பொழுது  நாம் நமது அடுத்த தலைமுறைக்கு நஞ்சற்ற வேளாண் முறையை தருவதோடு ஆரோக்கியமான உணவுக்கும் (Healthy Food) வழிவகை செய்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இயற்கை வேளாண்மையின் அடிப்படை நிலைகள்

விளை நிலத்தை தயார்படுத்துதல்

அனைத்து விதமான பயிர் வளர்வதற்கு ஏற்றவாறு நிலத்தினை தயார் செய்வது வேளாண்மையின் முதல் படியாகும். எனவே நிலத்தினை நன்கு உழுது  மண்ணினை  உழுவதற்கு எளிதாகவும், பஞ்சு போல மிருவானதாகவும் மாற்ற வேண்டும். இயற்கை வேளாண்மையினை எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம். 50 வருடங்கள் செயற்கை உரம் பயன்படுத்திய நிலத்தின் வளத்தினை கூட 6 மாதங்களில் இயற்கை வேளாண்மையின் மூலம் மீட்டெடுக்கலாம்.

பயிர் சுழற்சி முறை

விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பயிரை வகைகளை சாகுபடி (Cultivation) செய்வதைத் தவிர்த்து, சுழற்சி முறையில் (Rotational) பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்தால் கூடுதல் மகசூல் (Yield) கிடைக்கும். அதுமட்டுமல்லாது ஒரே மாதிரியான பயிரினை தொடர்ந்து பயிர் செய்வதால் நிலமானது தனது வளத்தினை இழக்கிறது. எனவே பயிர்களை சுழற்சி முறையில் பயிர் செய்வதன் மூலம் நிலம் இழந்த வளத்தினை மீட்டெடுக்கலாம். பயிர் செய்யும் நிலத்தின் தன்மை, நீரின் அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப பயிர் சுழற்சி முறையை மேற்கொள்ளலாம்.

கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி

இயற்கை வேளாண்மையில் கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி (Intercropping Cultivation) செய்வதன்  மூலம் பயிர் மகசூல் (Yield) அதிகரிக்கிறது. இவ்வாறு செய்வதினால் களைச்செடிகளின் எண்ணிக்கை பெருமளவில் கட்டுபடுத்த பட்டு, பூச்சிகளின் தாக்குதலை வெகுவாக குறைக்கலாம்.

Credit : Organic Farming

இயற்கை பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துதல்

செயற்கை உரங்களைப் பயன்படுத்தும் போது நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் எவை என்று பாராமல் அனைத்தையும் அழித்து விடும். இயற்கைப் பூச்சிவிரட்டிகள் தீமை செய்யும் பூச்சிகளை விரட்டும் பண்புடையது. மேலும் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிலும் இரசாயன கலப்பின்றி சுவையான ஆரோக்கியமானவற்றை உண்ணலாம். 

மூடாக்கி போடுதல்

மூடாக்கி போடுதல் என்பது முடி போடுதல் எனலாம்.  மூடாக்கு இடுவதன் முக்கிய நோக்கம் விளைச்சலை அதிக படுத்துவது ஆகும். இதற்காக பயிர்களுக்கு இடையே இலைதழை, வைக்கோல் (Straw), கரும்பு சோகை ஆகியவற்றைக் கொண்டு முடி விடுவார்கள். இதனால் வேர் (Root) பகுதிகளின்  ஈரப்பதம்  பாதுகாக்க பட்டு  மண்புழுக்கள் வளர எதுவாக இருக்கும். களை செடிகளின்  வளர்ச்சி கட்டுப்பாடு மண்ணின் தன்மை காக்கப்படுகிறது.

இயற்கை உரங்கள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்துதல்

இயற்கை உரங்கள் (Natural Compost) ஆன மண்புழு உரம், சாண எரு உரம், தொழுஉரம், பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தழை உரம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

பயிர்கள் நன்கு செழித்து வளர அதிக இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகளான  குணப்பசலம், தேங்காய்பால்மோர், அமிர்தக்கரைசல், பஞ்சகவ்யாஆகியவை பயன் படுத்த வேண்டும்.

Credit : Organic Farming

பயிர்களுக்கிடையேயான இடைவெளி

நம் முன்னோர்கள் ஒவ்வொரு பயிருக்கும் இடைவெளியினை , நெல்லுக்கு நண்டோட, கரும்புக்கு ஏரோட, வாழைக்கு வண்டியோட, தென்னைக்குத் தேரோட என்னும் பழமொழிக்கு ஏற்ப வகுத்தனர்.

தரமான நாட்டு விதைகளைப் பயன்படுத்துதல்

ஒவ்வொரு தாவரத்திற்கு உயிர் நாடி என்பது விதை யாகும். எனவே விதைகளை தேர்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.  தரமான நாட்டு விதைகளைப் (Natural Seed) பயன்படுத்தி இயற்கை முறையில் வேளாண் செய்வதன் மூலம் அதிகமான விளைச்சலுடன் தரமான பொருட்களைப் பெற இயலும்.

Anitha Jegadeesan

Krishi Jagran

மேலும் படிக்க

தோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு 35 கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டது!

ரேஷன் கடையில் பனங்கருப்பட்டி வழங்க பரிசீலனை! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

English Summary: Necessity And Importance OF Organic Farming: Organic Agriculture Hepls To Sustain The Lands Fertility Published on: 17 June 2019, 04:14 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.