விவசாய அறிவியல் நிறுவனமான FMC இந்தியா, கரும்பு பயிருக்கான புதிய களைக்கொல்லியான (Austral herbicide) எனப்படும் ஆஸ்ட்ரல் களைக்கொல்லியை அறிமுகப்படுத்தியுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. ஆஸ்ட்ரல் களைக்கொல்லியானது கரும்பின் முக்கியமான வளர்ச்சி நிலையில், புதிய அளவிலான பரந்த ஸ்பெக்ட்ரம் களைக்கட்டுப்பாட்டினை வழங்குகிறது, இது சிறந்த விளைச்சலுக்கான பயிரின் வலுவான நிலைப்பாட்டை உறுதி செய்கிறது.
உலகில் கரும்பு உற்பத்தியில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் கரும்பு விவசாயிகள், களைகள் மற்றும் பல்வேறு காரணங்களால் பெரும் பயிர் இழப்புகளை சந்திக்கின்றனர். அகன்ற இலை களைகளைக் கட்டுபடுத்துவது, பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்- கரும்பு வளர்ப்பு நிறுவனம் (ICAR- SBI) கரும்பு உற்பத்தித்திறன் 10 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரை பாதிக்கப்படும் என்று மதிப்பிட்டுள்ளது. 2021-22 சீசனில் (அக்டோபர் - செப்டம்பர்) சமீப காலங்களில் கரும்பு அதிக விளைச்சல் தரும் ஆண்டாக இருந்ததாக மகாராஷ்டிர அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பருவத்தில் 132 லட்சம் டன் சர்கரை உற்பத்தியாக, அம்மாநிலம் சாதனை படைத்துள்ளது.
பாதுகாப்பு அடுக்கு (Layer Of Protection):
"ஆஸ்ட்ரல் களைக்கொல்லியின் தனித்துவமான இரட்டை செயல் முறையானது, கரும்பில் முக்கியமான பயிர்-களை சரியான காலத்தில் களை இல்லாத நிலையை வழங்குகிறது. இந்த புதுமையான தனியுரிம தயாரிப்பு தீர்வு மண்ணின் மேல், பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது, முக்கியமான பயிர் வளர்ச்சியின் போது களைகள் முளைப்பதைத் தடுக்கிறது, இதன் விளைவாக அதிக எண்ணிக்கையிலான ஆரோக்கியமான உழவர்கள், இதன் மூலம் கரும்பில் அதிக மகசூல் பெறுவார்கள்" என்று அந் நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: பூச்சிகளிடமிருந்து உங்கள் பயிரை பாதுகாக்க, இன்றே APS LU-C பெரோமோன் லூரை வாங்குகள்
அடடே: பள்ளிகளுக்கு மீண்டும் ஒருவாரம் விடுமுறையா? அரசு அறிவிப்பு!
FMC இந்தியாவின் தலைவர் ரவி அன்னவரபு பேசுகையில், “கரும்பு விவசாயிகளுக்காக பிரேத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆஸ்ட்ரல் களைக்கொல்லி தொழில்நுட்பம் சார்ந்த, அறிவியல் தீர்வுகள் மூலம் சிறந்த மகசூல் பெறுவதற்கான, எங்கள் அர்ப்பணிப்புக்கு சான்றாகும். ஆஸ்ட்ரல் களைக்கொல்லியானது கரும்பு விவசாயிகளுக்கு சிறந்த களைகளைப் பாதுகாப்பதன் மூலம் அவர்களின் வருமானத்தை மேம்படுத்த உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆஸ்ட்ரல் களைக்கொல்லி 500 கிராம் முதல் 1 கிலோ பொதிகளில் வரும் பருவத்தில், நாடு முழுவதும் உள்ள முன்னணி சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்க பெறுவீர்கள் என தெரிவித்தார்.
மேலும் படிக்க:
CBSE 10th 12th Term-2 Result 2022: இந்த செயலிகளில் பார்க்கலாம், லிஸ்ட் இதோ!
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்: அறிந்திடுங்கள்