1. மற்றவை

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்: அறிந்திடுங்கள்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Job creation scheme for youth: How to get it?

தமிழ்நாடு அரசு வேலையில்லாத இளைஞர்களுக்கு குறிப்பாக சமுதாயம் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பிரிவு மக்கள் உற்பத்தி/சேவை மற்றும் வியாபார நிறுவனங்கள் அமைத்து சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகும். இத்திட்டத்தின் முழு விவரத்தையும் உள்ளே காணுங்கள்.

திட்டத்தின் பயன் பெறுவதற்கான தகுதிகள்:

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும். அதிகபட்சமாக 35 வயது வரை பொது பிரிவினருக்கும், 45 வயது வரை சிறப்பு பயனாளிகளான மகளிர், பட்டியலினத்தோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தின் பயனை பெறுவதற்கான நடைமுறைகள்:

இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரையிலும்,

சேவை சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ.3 லட்சம்
வியாபாரம் சார்ந்த தொழில்கள் துவங்க அதிகபட்சமாக ரூ.1 இலட்சம்

தினமும் ரூ.17 செலுத்தி லட்சாதிபதியாக வேண்டுமா? அப்படியானால் உங்களுக்குதான் இந்த தகவல்!

மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது திட்ட மதிப்பிட்டில் 25% அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் மானியம் அளிக்கப்படுகிறது. பொது பயனாளி தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10% செலுத்த வேண்டியிருக்கும். சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் 5% செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய பயனாளிகள் http://www.msmeonline.tn.gov.in/uyegp/ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், ஈரோடு தொலைபேசி எண்: 0424 2275283 முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க:

சென்னை: கோயம்பேடு காய்கறி விலை என்ன

Kitchen Hacks: அரிசி பெட்டகத்தில் வண்டு பிரச்சனையா? இதை செய்யுங்கள்

English Summary: Job creation scheme for youth: get to know? Published on: 29 June 2022, 03:01 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.