
நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க ரூ.1லட்சம் வரை மானியம் !
கோழிப்பண்ணை அமைக்க 1.66 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளதால், கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இந்த மாதம் 10ம் தேதி கடைசி தேதியாகும்.
#harghartiranga பிரச்சாரத்தில் கிரிஷி ஜாக்ரனுடன் இணைந்தார், முன்னாள் அமைச்சர் ஸ்ரீ பிரதாப் சந்திர சாரங்கி
தேசத்தின் 75வது சுதந்திர தினம், இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதனை, 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பெயரில் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிரிஷி ஜாக்ரனுடன் நாடாளுமன்ற உறுப்பினரும், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மற்றும் மீன்வளம் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீ பிரதாப் சந்திர சாரங்கி, இந்திய அரசின் விவசாய சூழ்நிலை, தொழில் மற்றும் தொழில்துறைக்கான தனது பார்வையை பகிர்ந்து கொள்ள் கிரிஷி ஜாக்ரன் சௌப்பாலுக்கு வருகை தந்தார். அத்துடன் அவர் #harghartiranga-இன் பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் தேசிய கோடி அசைத்து, அனைவரையும் ஊக்குவித்தார்.
பயிர் காப்பீடு தொடர்பான அரசின் முக்கிய அறிவிப்பு!
விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலோ பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை தமிழகத்தில் செயல்படுத்துவற்காக தமிழ்நாடு அரசு நிதியினை அனுமதித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. விவசாயிகள் நலன்கருதி தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எனவே விவசாயிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
FOOD PRO 2022 - இவ் பிரேத்யேக நிகழ்ச்சி, இன்று முதல் தொடக்கம்
இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) 1995 ஆம் ஆண்டு முதல் Foodpro - உணவுப் பதப்படுத்துதல் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் குறித்த பிரத்யேக முயற்சியை ஏற்பாடு செய்து வருகிறது. Foodpro 2022 இன் 14வது பதிப்பு இன்று துவங்கி ஆகஸ்ட் 07, 2022 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இதில், உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு வகையான உணவுப் பொருட்களைக் காட்சிப்படுத்த "ஃபுட் எக்ஸ்போ" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கிரிஷி ஜாக்ரன் குழுவினரும் கலந்துக்கொண்டு வருகின்றனர்.
காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு அரசு எச்சரிக்கை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், காவிரியாற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், விளாங்குடி கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டோடுகிறது வெள்ளம். இதைத்தொடர்ந்து, கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் இடங்களை சீரமைக்க, தேவையான ஆய்தம் பணிகள் நடந்து முடிந்தன.
விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் மானியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
பொள்ளாச்சியின் ஆனைமலை ஒன்றிய பகுதியில், பந்தல் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. எனவே அதனைப் பெற உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. விவசாயிகள் மூங்கில் பயன்படுத்தி பந்தல் காய்கறி சாகுபடி செய்ய, ஒரு ஹெக்டேருக்கு, 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. 10 ஹெக்டேருக்கு இலக்கு பெறப்பட்டுள்ளது. அதேபோல், கருங்கற்கள் மற்றும் கம்பிகள் பயன்படுத்தி பந்தல் காய்கறி சாகுபடி செய்ய, ஒரு ஹெக்டேருக்கு, இரண்டு லட்சம் ரூபாய் வரையில் மானியம் வழங்கப்படுகிறது.
AJAI; Farmer The Journalist - கர்நாடகாவில் விவசாயிகளுக்கு ஆன்லைன் பயிற்சி
AJAI என்று அழைக்கப்படும் Agriculture Journalist Association of India அதாவது இந்தியாவின் வேளாண் பத்திரிக்கையாளர் சங்கம் மூலம் தொடங்கப்பட்ட Farmer The Journalist நிகழ்ச்சி நிரலின் 10வது பேட்ச் இன்று காலை 11 மணியளவில், நிறுவனரும் முதன்மை ஆசிரியருமான திரு எம்.சி டாம்னிக் தலைமையில், கன்னடம் மொழி உள்ளடக்க எழுத்தாளரும், விவசாய செய்தியாளருமான மால்தேஷ் ஆகாசர் நடத்தினார். இதில் விவசாயிகள் தங்கள் சந்தேகங்களை கேட்டு, தீர்வுகண்டனர்.இந்த நிகழ்ச்சி நிரல் செவ்வானே நிறைவுபெற்றது.
வானிலை தகவல்:
வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆகஸ்ட் 7ம் தேதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்றும், நாளை மறுநாளும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் உருவாகிறது. பின்னர், ஆகஸ்ட் 8ம் தேதிக்கு பிறகு மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:
தமிழகம்: ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 3 நாள் உணவுத் திருவிழா 2022
தோட்டக்கலைத் துறை மானியம் 2022-23 அறிவிப்பு – உடனே விண்ணப்பிக்கலாம்