1. வாழ்வும் நலமும்

மருதாணி 100% செக்க செவேல்னு சிவக்க, இந்த பொருட்கள் போதும்!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Henna 100% Cheka Sevelnu Red, these ingredients are enough!

மருதாணி என்றாலே அதன் சிவக்கும் தன்மை தான், அதன் அழகே. மருதாணி வைக்கும் பெண்கள் பொதுவாக, யாருடைய கை அதிகமாக சிவக்கின்றது, என்று அறிய ஆர்வம் கொண்டிருப்பார்கள். ஆனால் கடையில் வாங்கி வைக்கும் மருதாணியின் சிவப்பு, மனதிற்கு திருப்தி அழிப்பதில்லை. எனவே அனைவரும் வீட்டியிலேயே மருதாணி தயாரிக்கின்றனர். அந்த வகையில் சில டிப்ஸ்களை பின்பற்றினால் போதும், வீட்டில் தயாரிக்கும் மருதாணி வைத்து கைகளை சிவக்க செய்திடலாம், வாருங்கள் டிப்ஸ்களை பார்க்கலாம்.

Tips:

  • 300ml தண்ணீர் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
  • அடுத்து அதில் 1 டீ ஸ்பூன் அளவிற்கு சோம்பு சேர்க்கவும்.
  • இதைத் தொடர்ந்து, 2 டீ ஸ்பூன் அளவிற்கு டீ தூள் சேர்க்கவும், டீ தூள் நிறத்தை கொடுக்கும் தன்மை உடையது.
  • அத்துடன் கிராம்பு 4-5 மற்றும் பட்டை 1 இன்ச் அளவிற்கு பட்டை சேர்க்கவும்.
  • பட்டை, கிராம்பு, சோம்பு அனைத்துமே மருதாணி ஊற, ஊற நிறத்தை வெளிகொனரும் தன்மை உடையது.
  • இவை இனைத்தையும் கொதிக்க விட வேண்டும். இந்த கலவை ¾ பாகம் வரும் வரை கொதிக்க விட வேண்டும்.
  • அடுத்ததாக வாங்கி வைத்திருக்கும், நல்ல பிராண்டட் இயற்கையான மருதாணி தூளை சலித்து எடுத்துக்கொள்ளவும், அவ்வாறு செய்வதினால் கட்டிகள் விழுவதை தவிர்த்திடலாம்.
  • இதன் பின்னர், இத்துடன் ¾ டீ ஸ்பூன் பாவுட்ர் சர்கரையை சேர்க்கவும். இதனால் மருதாணியை கையில் வைக்கும் போது நல்ல ஒட்டிக்கொள்ளும், உதிராமல் தவிர்த்திடலாம்.
  • அடுத்தாக, தயாரித்த தண்ணீரை ஆர விட்டு, மருதாணியுடன் கட்டி விழாமல் சேர்த்து கலக்கவும். (குறிப்பு: போர்க் அல்லது விஸ்க் உபயோகிக்கவும், இது கட்டிகள் விழாமல் தவிர்க்க உதவும்)
  • தண்ணீர் பற்றவில்லை என்றால், சலித்து வைத்திருக்கும் பொருட்களுடன் மீண்டும் தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதிக்க விட்டு ஆர வைத்து, இதில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • இத்துடன் யூகலிப்டஸ் எண்ணெய் (Eucalyptus oil) 10 டிராப்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள். இது நல்ல நற்மனம் தரும், மேலும் நிறத்தை வெளிக்கொண்டுவர உதவும்.
  • அதன் பின்னர், இந்த கலவையை 12 மணி நேரம் Room Temperature-இல் வைக்க வேண்டும்.
  • அதன் பின்னர், இதனை உபயோகிக்கலாம், அதே நேரம் கோனில் போட்டு உபயோகிக்க நினைப்பவர், சற்று தண்ணீர் விட்டு உபயோகிங்கள்.

(குறிப்பு: முதல் முறை உபயோகிப்பவர், பெட்ச் டேஸ்ட் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்)

  • பின்னர், நீங்கள் கையில் வைக்கலாம், இதனை சுமார் 7-8 மணி நேரம் வைக்க வேண்டும். அப்போதுதான் இதன் முழுமையான பலன் பெறலாம். நல்ல காய்ந்த பிறகு உதிர்த்து விடவும், சோப்பு போடக்கூடாது. பின்னர் கையில் தேங்கெண்ணையை உபயோகிக்கவும்.
  • கண்டிப்பாக உங்கள் கைகள் சிவத்திருக்கும், என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தேவையான பொருட்கள் ஒர் பார்வை:

இயற்கை மருதாணி தூள்

பவுடர் சர்கரை

யூகலிப்டஸ் எண்ணெய்

பட்டை 1 இன்ச்

கிராம்பு 4-5

டீ தூள் 2 டீ ஸ்பூன்

சோம்பு 1 டீ ஸ்பூன்

300ml தண்ணீர்

மேலும் படிக்க:

அரசு பேருந்துகளில் களைகட்டும் பார்சல் சேவை: மக்களிடையே நல்ல வரவேற்பு!

பனை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்: மானியத்துடன் நல்ல வருமானம்!

English Summary: Henna 100% Cheka Sevelnu Red, these ingredients are enough! Published on: 04 August 2022, 12:32 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.