கைவினைஞர்களுக்கு ரூ. 10 லட்சம் கடனுதவி! அரசு அறிவிப்பு, காளை வடிவில் நெல் சாகுபடி செய்த ஓய்வு பெற்ற ஆசிரியர், 2.5 லட்சம் குடும்பங்களுக்குக் கொசுவலை! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு, புதிய பேருந்து வழிதடத்தைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழின் சிறப்பினை விளக்கும் வகையில் சிங்கப்பூரில் நினைவுச் சின்னம் அமைப்பு, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தைக் குறைக்க கோரிக்கை, காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு இருப்பதால் விவசாயிகளுக்கு எச்சரிக்கை ஆகிய வேளாண் தகவல்களை இப்பதிவு விளக்குகிறது.
கைவினைஞர்களுக்கு ரூ. 10 லட்சம் கடனுதவி! அரசு அறிவிப்பு!!
தேசிய சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் கைவினை கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விராசட் - 2 எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின்கீழ் 6% வட்டியில் ரூ. 10 லட்சம் கடனுதவி வழங்கப்பட உள்ளது. இதன்கீழ் கடன் பெற விரும்புவோர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலம், மாவட்டக் கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாணமை கூட்டுறவு வங்கிகளை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயன் பெறுங்கள்.
காளை வடிவில் நெல் சாகுபடி செய்த ஓய்வு பெற்ற ஆசிரியர்!
நாகை மாவட்டம், மாராச்சேரி கிராமத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் வேணு காளிதாசன், சுமார் 8 வருடங்களாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர், பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையி, தனது நிலத்தில் காளை வடிவில் சின்னார் என்னும் நெல் ரகத்தை நடவு செய்துள்ளார். இது மாராச்சேரி கிராமத்தினரை மட்டுமல்லாமல் பல்வேறு மக்களையும் கவர்ந்துள்ளது. இதனைக் காண பல்வேறு மக்கள் வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.
2.5 லட்சம் குடும்பங்களுக்குக் கொசுவலை! அமைச்சர் சேகர்பாடு அறிவிப்பு!
சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 2.5 லட்சம் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் கொசுவலைகள் வழங்கப்படும் எனத் தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகப் பெருமழை வந்தாலும் அதை எதிர்கொண்டு போர்க்கால அடைப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் அனைவரையும் பாதுகாத்திட அரசு தாராக உள்ளது என கூறியதோடு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குக் கொசு வலைகளை வழங்கிட முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
புதிய பேருந்து வழிதடத்தைத் தொடங்கி வைத்தார் அமைசர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
தமிழகத்தில் சத்திரம் பேருந்து நிலையம் முதல் திருக்காட்டுப்பள்ளி மற்றும் செங்கிப்பட்டி முதல் கல்லணை இடையிலான புதிய பேருந்து சேவையினைத் தொடங்கி வைத்தார் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இப்பேருந்து சேவையினால் நான்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள், மாணவர்கள் என அனைவரும் பயனடைவார்கள். இந்த பேருந்து தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உட்பட ஏராளாமான மக்கள் பங்குபெற்றனர்.
தமிழின் சிறப்பினை விளக்கும் வகையில் சிங்கப்பூரில் நினைவுச் சின்னம் அமைப்பு!
சிங்கப்பூரின் நினைவு சின்னத்திற்கு சென்ற தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். சிங்கப்பூரில் பல்வேறு சிறப்புகள் இருப்பினும் அந்நாட்டின் ஆட்சி மொழிகளான தமிழ், மலாய், ஆங்கிலம் மற்றும் சீனா ஆகியவற்றின் எழுத்துக்களை ஒன்று சேர்ந்து கோர்த்தது போன்று ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய நினைவுச் சின்னத்திற்கு முன்பாக அமைச்சர் தனது நண்பர்களுடன் நிற்கும் புகைப்படத்துடன் முகநூலில் பதிவு போட்டதோடு தமிழின் பெருமையின் பக்க கர்வத்துடன் நிற்கிறோம் எனப் பதிவு செய்துள்ளார்.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தைக் குறைக்க கோரிக்கை!
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் டான்ஸ்டியா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த செப்.9-ம்தேதி முதல் மின் கட்டணம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, முதல்வரை நேரில் சந்தித்து டான்ஸ்டியா சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒருயூனிட் மின் கட்டணம் ஆந்திராவில் ரூ.7.21, கேரளாவில் ரூ.6.30,தெலங்கானாவில் ரூ.7.21, கர்நாடகாவில் ரூ.8 என வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் இது ரூ.9.38 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இதை ரூ.6.75 ஆக குறைக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
பெண் லட்சாதிபதி திட்டம்-ரூ.5 லட்சம் வரைவட்டியில்லாக் கடன்!
இன்றைய வேளாண் தகவல்களும் மானியம், இலவசப் பயிற்சி குறித்த தகவல்களும்!