Farm Info

Tuesday, 30 March 2021 04:52 PM , by: Daisy Rose Mary

அதிகப்படியான பயிர் விளைச்சல் மற்றும் சாகுபடிக்காக விவசாயிகளுக்கு ஸ்மார்ட் கருவிகள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தேவைப்படுகின்றன. இருப்பினும், பல விவசாயிகள் பணம் இல்லாததால் இந்தவகை வேளாண் இயந்திரங்கள் அல்லது அடிப்படை உபகரணங்களை வாங்க முடிவதில்லை. அத்தகைய விவசாயிகளுக்கு உதவ, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் முன்வருகின்றன. இதில்,, மஹிந்திரா பைனான்ஸ் நிதி நிறுவனம் வழங்கும் கடன் வசதிகள் குறித்து பார்க்கலாம்.

மஹிந்திரா பைனான்ஸ் நிதி நிறுவனம், விவசாயிகளுக்கு உதவுவதில் மிக முக்கியப்பங்காற்றி வருகிறது. மஹிந்திராவின் வேளாண் உபகரணக் கடன்களுடன் விவசாயிகள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கான டிராக்டர்கள் மற்றும் பண்ணை கருவிகளை விவசாயிகள் எளிதாக வாங்கலாம்.

விவசாயிகள் தங்களின் வேளாண் நிலத்தை அடமானம் வைக்காமல், டிராக்டர்கள் மற்றும் வேளாண் கருவிகளை வாங்க நீங்கள் கடன்களைப் பெறலாம். மஹிந்திரா ஃபைனான்ஸின் சிறந்த விஷயம் என்னவென்றால், உங்கள் தேவைகளுக்கு ஏற்ற, ஆவணங்களை பெற்று கடன் செயல்முறையை எளிதாக வழங்குகிறது. கூடுதலாக, நீங்கள் ஆவணங்களைச் சமர்ப்பித்த 2 நாட்களுக்குள் கடன் பொதுவாக அனுமதிக்கப்படுகிறது.

மஹிந்திரா நிதி நிறுவனம், இன்னும் பல வங்கிகளும், சிறிய நிதி நிறுவனங்களும் விவசாயிகளுக்கு பல்வேறு தேவைகளுக்காக கடன்களை வழங்குகின்றன.

டிராக்டர் கடன் பெற தேவையான ஆவணங்கள்

மஹிந்திரா பைனான்ஸிடமிருந்து டிராட்டர் கடன் பெற, மூன்று ஆவணங்கள் இருக்க வேண்டும், அவை,

  • KYC ஆவணங்கள்

  • கடனை திருப்பிச் செலுத்துவதை ஆதரிப்பதற்கான வருமான ஆதாரம்

  • விவசாய நில உரிமை ஆவணம்

டிராக்டர் கடனுக்கான விண்ணப்ப செயல்முறை

  • கடனுக்கு விண்ணப்பிக்கவும்

  • உங்களுக்கு தேவையான வேளாண் உபகரணங்களை தேர்ந்தெடுக்கவும்

  • ஒப்புதல் பெறுங்கள்

  • கடன் பெற்றிடுங்கள்

டிராக்டர் கடனுக்கு நேரடியாக விண்ணப்பிக்க... 

Mahindra Finance Tractor loan

அருகிலுள்ள கிளையை கண்டுபிடிக்க இங்கே கிளிக் செய்க 

Mahindra Finance store locator


மஹிந்திரா நிதி நிறுவனம்

மஹிந்திரா & மஹிந்திரா பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் என்பது இந்தியாவின் மும்பையில் அமைந்துள்ள ஒரு கிராமப்புற என்.பி.எஃப்.சி. வெவ்வேறு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிக அளவிலான நிதி தயாரிப்புகளை வழங்கும் நாட்டின் சிறந்த டிராக்டர் கடன் வழங்கும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
எஸ் பி ஐ வங்கி கடன்

மேலும் படிக்க....

விவசாயிகளே டிராக்டர் வாங்க விருப்பமா? எளிய முறையில் கடன் அளிக்கிறது SBI வங்கி!

குறைந்த விலையில் டிராக்டர் வாங்க வேண்டுமா? எளிய முறையில் கடன் வழங்குகிறது ICICI வங்கி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)