1. விவசாய தகவல்கள்

குறைந்த விலையில் டிராக்டர் வாங்க வேண்டுமா? எளிய முறையில் கடன் வழங்குகிறது ICICI வங்கி!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Tractor loan for farmers
image credit : JohnDeere Tractor India

இயந்திரமயமாதல் காரணமாக ஏர் உழுதல் முதல் அறுவடை வரை டிராக்டர் வாகனங்களை விவசாயிகள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். விவசாய தொழிலுக்கு ஆட்கள் குறைந்து வரும் வேளையில், ஏழை எளிய விவசாயிகளுக்காக ICICI வங்கி எளிய முறை டிராக்டர் கடன் வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.

முதன்முறையாக டிராக்டர் வாங்குபவர்களுக்கும், அல்லது விவசாய நிலங்களைக் கொண்ட டிராக்டர் உரிமையாளர்களுக்கும் எளிதான மற்றும் தொந்தரவில்லாத டிராக்டர் கடன்களை வழங்குகிறது ICICI வங்கி. ஆர்வமுள்ள விவசாயிகள் தங்களது அருகிலுள்ள ICICI வங்கி கிளைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது,வங்கியின் 24/7 மணிநேர வாடிக்கையாளர் பராமரிப்பு எண்ணை தொடர்புகொண்டு தகவல்களை கேட்டறியலாம்.

ICICI வங்கியின் இந்த எளியமுறை டிராக்டர் கடன் (Tractor loan) வசதியை எப்படி பெறுவது, அதற்கு தேவையான ஆவணங்கள், கட்டணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்தப்பதிவில் விரிவாக பார்க்கலாம்..

ICICI எளியமுறை டிராக்டர் கடன் - நன்மைகள்

  • எளிமையாக்கப்பட்ட கடன் நடைமுறை

  • விரைவான செயலாக்கம்

  • 5 ஆண்டுகள் வரையிலான திருப்பிச் செலுத்தும் வசதி

  • திருப்பிச் செலுத்தும் முறைகளில் தளர்வு

  • நிலையான வட்டி விகிதம்

  • அடமானமற்ற கடன் வசதி

  • குறைந்த செயலாக்க கட்டணம்

  • குறைந்த வட்டி விகிதம்

யாரெல்லாம் கடன் பெற முடியும் ?

  • கடன் வாங்குபவரின் பெயரில் குறைந்தபட்சம் 3 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்

  • வேளாண் வருமானம் தகுதி கணக்கீடு அடிபடையில் பரிசீலிக்கப்படும்.

  • வணிகப் பிரிவுகளுக்கு வணிக வருமானம் பரிசீலிக்கப்படும்.

tractor loan for farmers

தேவைப்படும் ஆவணங்கள்?

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்

  • கடன் வாங்குபவரின் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

  • கையொப்ப சான்று - பார்போர்ட், ஓட்டுநர் உரிமம், பார் அட்டை

  • அடையாளச் சான்று

  • முகவரிச் சான்று

  • டிராக்டர் Quotation நகல்

  • நில ஆதார ஆவணங்கள்

  • நில மதிப்பீட்டு அறிக்கை (தேவைப்பட்டால்)

  • கடந்த கால கடன் அறிக்கைகள் (தேவைப்பட்டால்)

கடன் பெருவதற்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டி ஆவணங்கள்

  • முந்தைய கடன்கள் செலுத்தப்பட்டதற்கான ஆவணங்கள்

  • டிராக்டர் வாங்கியதற்கான அசல் விலைப்பட்டியல்

  • அடமானப் பத்தரம் (தேவைப்பட்டால்)

  • ICICI வங்கியின் விரிவான காப்பீடு பத்திரம்

  • துணை பதிவாளரிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் சான்று 

விவசாயிகளே டிராக்டர் வாங்க விருப்பமா? எளிய முறையில் கடன் அளிக்கிறது SBI வங்கி!

டிராக்டர் கடன் - சேவைக் கட்டணம் & கட்டணம்

  • முன் கட்டணம் (Pre Payment) - அசல் நிலுவையில் 4% அல்லது காலாவதியாகாத கடனுக்கான வட்டி விகிதம்

  • வங்கி செயலாக்க கட்டணம் (Processing Fee) - 4% வரை மட்டுமே.

  • பகுதி கட்டணம் (Part payment) - கிடையாது.

  • நிலுவை இல்லா சான்றிதழ் நகல் (Duplicate No due certificate) - ரூ.500 (GST சேர்த்து)

  • NOC மறு மதிப்பீடு செய்தல் கட்டடம் - ரூ.500 (GST சேர்த்து)

  • ECS / Check / SI க்கான கட்டணங்களை மாற்றுதல் - ரூ.500 (GST சேர்த்து)

  • நடைமுறையில் இருக்கும் முத்திரை வரி (Stamp duty) பொருந்தும், அதனுடன் ரூ.42 (ஜிஎஸ்டி சேர்த்து) வசதிக் கட்டணம்

  • கால தாமதமாம் ஆன அல்லது செலுத்தப்படாத தவணைகளுக்கு ஆண்டுக்கு 2% வட்டி கட்ட வேண்டும்

  • கடன் ரத்து கட்டணம் - வாடிக்கையாளர் செலுத்த வேண்டும். ரூ.1000 கூடிய செயலாக்கக் கட்டணம்

  • செக் பவுன்ஸ் கட்டணம் - ரூ.500 (ஜிஎஸ்டி இல்லாமல்)

  • கணக்கு அறிக்கை பெற - ஜிஎஸ்டி உட்பட ரூ.200

  • கடன் ஆவணக் கட்டணங்கள் - ஜிஎஸ்டி உட்பட ரூ.2000

 

icici offers loan for tractors

முக்கிய குறிப்புகள்

  • ஜிஎஸ்டி மற்றும் பிற அரசு வரிவிகிதங்கள், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் விருப்பப்படி இந்த கட்டணங்களும், அதற்கு மேலும் வசூலிக்கப்படலாம்.

  • மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டணங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை

  • இந்த கடன் விதிமுறைகள் ஆகஸ்ட் 10, 2009க்குப் பின்னான வட்டிவிகிதங்களுக்கு பொருந்தும். அந்த தேதிக்கு முன்னர் பெறப்பட்ட கடனுக்கு, காசோலை திரும்பக் கட்டணம் ரூ. 200

  • வட்டி மீட்டமைப்பு விதி: பொருந்தும்

டிராக்டர் கடனுக்கான வட்டி விகித வரம்பு

கடன் வசதி வகை

அதிகபட்சம்

குறைந்தபட்சம்

சராசரி

டிராக்டர்

23.75%

13.0%

15.9%

மற்ற குறிப்புகள் 

  • இந்த வட்டி விகிதங்கள் FY 20 நடப்பு நிதியாண்டின் அடிபடையில் கருத்தப்படுகிறது.

  • கடன் வட்டி விகிதங்கள், வங்கி மதிப்பீடுகளின் தரம் மற்றும் சந்தையில் அதன் மறுவிற்பனை மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

  • இது மானிங்கள் மற்றும் அரசு திட்டங்களை விலக்குகிறது.

  • ஆண்டு சதவீத வீகிதம் (APR) கணக்கீடு

  • வருடாந்திர கடன் செலவைக் கணக்கிடுவதற்கு APR வழங்கப்படுகிறது. இதில் வட்டி விகிதம் மற்றும் செயலாக்கக் கட்டணம் ஆகியவை அடங்கும்.

  • APR-ல், முத்திரை வரி உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.


*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

தகவல் : https://www.icicibank.com/rural/loans/tractor-loan.page?#toptitle

மேலும் படிக்க .... 

தேசிய ஓய்வூதிய திட்டம் தெரியுமா உங்களுக்கு? உங்களின் எதிர்காலத்தை அழகாக்கலாம் வாருங்கள்!

Solar Pump Set: 70% மானியத்தில் பம்பு செட் திட்டம் - ஆதிதிராவிட & பழங்குடியின விவசாயிகளுக்கு அரசு அழைப்பு!

Jan Dhan Yojana: ஜன் தன் திட்டம் குறித்து அறிந்து கொள்ள மாநில அளவிலான இலவச உதவி என்கள்!

English Summary: ICICI provides Easy loans for Tractor and to meet your agricultural and commercial needs Published on: 29 July 2020, 06:34 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.