பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 17 June, 2021 11:03 AM IST

புவியியல் குறியீட்டுச் சான்றிதழ் பெற்ற வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் நார் மற்றும் தாதுச் சத்து நிறைந்த ‘ஜல்காவோன் வாழைப்பழம் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

வேளாண் ஏற்றுமதி கொள்கையின் கீழ் மகாராஷ்டிராவின் ஜல்காவோன் மாவட்டத்தில் உள்ள தண்டல்வாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து புவியியல் குறியீட்டுச் சான்றிதழ் பெற்றுள்ள 22 மெட்ரிக் டன் ஜல்காவோன் வாழைப்பழம் பெறப்பட்டது.

ஜல்காவோனின் நிஸர்க்ராஜா க்ரிஷி விக்யான் கேந்திராவில் பதிவு செய்யப்பட்ட ஜல்காவோன் வாழைப்பழத்திற்கு கடந்த 2016-ஆம் ஆண்டு புவியியல் குறியீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சர்வதேச தரத்திற்கு நிகரான வேளாண் செயல்முறைகளை பின்பற்றுவதால் இந்தியாவில் வாழைப்பழங்களின் ஏற்றுமதி தீவிரமாக அதிகரித்து வருகிறது.

கடந்த 2018-19-ஆம் ஆண்டு ரூ.413 கோடி மதிப்பில் 1.34 இலட்சம் மெட்ரிக் டன் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2019-20-ஆம் ஆண்டில் ரூ. 660 கோடி மதிப்பில் 1.95 லட்சம் மெட்ரிக் டன்னாக ஏற்றுமதியின் எண்ணிக்கையும் மதிப்பும் உயர்ந்தது.

2020-21-ஆம் ஆண்டில் ரூ. 619 கோடி மதிப்பில் 1.91 லட்சம் மெட்ரிக் டன் வாழைப்பழங்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. மொத்த உற்பத்தியில் சுமார் 25 சதவீதத்துடன் உலகளவில் வாழைப்பழங்களின் உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, உத்தரப்பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நாட்டின் மொத்த வாழைப்பழ உற்பத்தியில் சுமார் 70 சதவீத பங்கு வகிக்கின்றன.

மேலும் படிக்க....

தென்னையில் அதிக மகசூல் பெற, எப்போது எவ்வளவு உரம் இட வேண்டும்?

பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்!

English Summary: GI certified Jalgaon banana, India exported Rs 619 crore of banana during 2020-21
Published on: 17 June 2021, 10:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now