1. தோட்டக்கலை

தென்னையில் அதிக மகசூல் பெற, எப்போது எவ்வளவு உரம் இட வேண்டும்?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
When and how much fertilizer should be applied to get high yield in coconut?

Credit : Pinterest

பொள்ளாச்சி பகுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதையடுத்து, தென்னை மரங்களுக்கு உரமிடுதல் குறித்து வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

11,000 ஹெக்டேரில் தென்னை (Coconut on 11,000 hectares)

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் மட்டும், 11,000 ஹெக்டேர் பரப்பில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. தென்னை மரங்களுக்கு, நீர் மற்றும் உர மேலாண்மையைப் பின்பற்றினால், நல்ல மகசூலைப் பெறலாம்.

எதிர்ப்புத் திறனை மேம்படுத்த (To improve resistance)

பூச்சி, நோய்த் தாக்குதல்களுக்கான எதிர்ப்பு திறனை மேம்படுத்தலாம் என வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

தெற்கு வட்டார வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி தென்னைக்கு உரம் கொடுப்பது குறித்து வெளியிட்டுள்ள பரிந்துரையையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது :

உரமிடுதல் (Fertilization)

  • தென்னை மரத்தில், சத்துகளை எடுத்துக்கொள்ளும் வேர்கள், மரத்தின் அடிப் பகுதியில் இருந்து, 2 மீட்டர் தள்ளி இருக்கும்.

  • எனவே, உரமிடும் போது, மரத்தின் அடிப்பகுதியில் இருந்து, 1.8 மீட்டர் தள்ளி 20 செ.மீ., ஆழத்தில் செ.மீ.. ஆழத்தில் உரமிட மண் மூட வேண்டும்.

எவ்வளவு உரம்? (How much fertilizer?)

  • ஓராண்டில், நன்கு மக்கிய தொழு உரம் - 50 கிலோ, வேப்பம் புண்ணாக்கு - 5 கிலோ, யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் - 2 கிலோ, தென்னை நுண்ணூட்ட கலவை - 1 கிலோ, அசோஸ்பைரிலம் - 50 கிராம், பாஸ்போ பாக்டீரியா - 50கிராம் ஆகிய உரங்களைக் கட்டாயம் அளிக்க வேண்டும்.

  • இந்த உரங்களை இரு சமப் பங்காகப் பிரித்து, பாதி அளவை நடப்பு ஜூன், ஜூலை மாதங்களிலும், எஞ்சியதை டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் வைக்க வேண்டும். அவ்வாறு உரம் வைத்ததும் பாசனம் செய்ய வேண்டும்.

  • ஆனால் பருவமழைக் காலத்தில் உரம் வைக்கும் போது, பாசனம் செய்ய வேண்டிய தேவை இல்லை.

ரசாயனத்துடன் சேர்க்கக்கூடாது (Do not mix with chemicals)

இதில், பாஸ்போ பாக்டீரியா உரங்களை, ரசாயன உரங்களுடன் சேர்த்து இடக்கூடாது. இந்த உர மேலாண்மையைக் கடைப்பிடித்தால், குரும்பை உதிர்தல் கட்டுப்படுவதுடன், அதிகக் காய்களும் காய்க்கும்.

மகசூல் குறைவது தடுக்கப்படும் (Yield reduction will be prevented)

நோய், பூச்சித் தாக்குதலால் மரங்கள் ஆரோக்கியம் இழந்து, மகசூல் குறைவது தவிர்க்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு, விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

சரியான விவரம் இல்லாமல் இதை தொடாதீர்கள்: குறிப்பாக நீங்கள்

கோடை காலத்தில் இந்த உணவு சாப்பிடுவதை தவிருங்கள்!

ரத்த ஓட்டத்தை சீராக்க இவை மட்டும் போதும்!

English Summary: When and how much fertilizer should be applied to get high yield in coconut?

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.