தேனி மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் சமீபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், புகாரளிக்கலாம் என தொடர்பு எண்ணையும் ஆட்சியர் அறிவித்தார்.
தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு நெல் இதுவரை 7,594 எக்டர் பரப்பிலும் சிறுதானியங்கள் 11,452 எக்டரிலும், பயிறு வகைகள் 7,786 எக்டரிலும், பருத்தி 2,613 எக்டரிலும், எண்ணெய்வித்து பயிர்கள் 1,784 எக்டரிலும் மற்றும் கரும்பு 2,234 எக்டர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மார்கழி பட்டம்- எண்ணெய் வித்து விதைகள்:
வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு நெல் விதை இதுவரை 119 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் விதை 5.70 மெ.டன்னும் (NLR, ADT 54 & CO 52), சிறுதானியங்கள் 2.00 மெ.டன்னும் (கம்பு கோ 10, சோளம் கே 12) பயறு வகை விதைகள் 9.100 மெ.டன்னும், எண்ணெய்வித்துப் பயிர் விதைகள் 6.5 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நடப்பு மார்கழி பட்டத்தில் எண்ணெய் வித்து விதைகள் கிலோவிற்கு ரூ.36/- மானியத்தில் விதை கிராம திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படவுள்ளது.
உரம் கையிருப்பு எவ்வளவு?
தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1,694 மெ.டன்னும் (MFL. Spic & IFFCO), DAP 433 மெ.டன்னும் (Green star, IPL & IFFCO) பொட்டாஷ் 824 மெடன் (IPL) மற்றும் கலப்பு உரங்கள் 4,909 மெ.டன்னும் (Fact, GFL,CIL, IFFCO) தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், உரம் கிடைப்பதில் பிரச்சினை, அதிக விலைக்கு விற்பனை செய்வது மற்றும் உரம் பதுக்கல் பற்றிய புகார்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் (த.க) (பொ) 94432 32238 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
மானியத்தில் உரம்:
மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நெல்லிற்கு ஜிங்க் சல்பேட் ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவிலும் (முழு விலை ரூ.690/ மானியம் ரூ.250/), ஜிப்சம் ஏக்கருக்கு 200 கிலோ என்ற அளவிலும் (முழு விலை ரூ.770/ மானியம் ரூ.250/), விநியோகம் செய்யப்படவுள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் விற்பனை செய்யப்படும் இடுபொருட்களுக்கான விவசாயிகளின் பங்குத் தொகையினை தற்பொழுது விவசாயிகள் QR Code முறையிலும் செலுத்திட வசதி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த வசதியினைப் பயன்படுத்திட வேண்டும்.
வேளாண்மை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உழவன் செயலி மூலம் பதிவேற்றம் செய்து மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்படும் மானியங்களை பெற்று பயனடையுமாறும் மேலும் விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
Read also: இடைக்கால பட்ஜெட் 2024- விவசாயிகளுக்கும் வருமான வரி?
விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடங்குவதற்கு முன் பட்டுவளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானியங்கள் குறித்து உதவி இயக்குநர் பட்டு வளர்ச்சித் துறை, தேனி அவர்களால் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அதன் பின்பு தேனி விற்பனைக்குழுவின் மூலம் e-NAM சந்தையின் மூலம் விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வது குறித்து கண்காணிப்பாளர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், தோட்டக்கலை துறையின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அதற்கு வழங்கப்படும் மானியங்கள் மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தேனி- தோட்டக்கலை துணை இயக்குநர் அவர்கள் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். தேனி மாவட்டத்தின் மழையளவு குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
Read also:
TN land survey- இணையதளத்தில் பட்டா மாறுதல் உட்பட இவ்வளவு வசதிகள் உள்ளதா?
அதிகரித்த தக்காளி- உருளை: தோட்டக்கலை சாகுபடி ரிப்போர்ட் வெளியீடு