1. செய்திகள்

TN land survey- இணையதளத்தில் பட்டா மாறுதல் உட்பட இவ்வளவு வசதிகள் உள்ளதா?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
TN land survey portal

தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்துறை உருவாக்கியுள்ள tnlandsurvey என்கிற இணையதளம் மற்றும் “தமிழ்நிலம்” செயலி மூலம் நிலஅளவைத் தொடர்பான விவரங்களை பெறலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-

தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்டத்துறை www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது. அதில் பட்டா மாறுதல் "தமிழ்நிலம்" கைப்பேசி செயலி இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணைய வழி சேவை Tamil Nilam Citizen portal- (https://tamilnilam.tn.gov.in/citizen/) இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

புலப்படங்களுக்கான மென்பொருள் இணைப்பு:

உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரிவரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ்நிலம் (ஊரகம்) மற்றும் தமிழ்நிலம் (நகரம்) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டு வர எதுவாக கொலாப்லேண்ட் மென்பொருள் உருவாக்கப்பட்டு இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

eservice சேவையும் இணைப்பு:

பட்டா/சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க அபதிவேடு, அரசு புறம்போக்கு நிலவிவரம், புலப்படம்/நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறியும் எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவை (www.eservices.tn.gov.in) இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப்பட்டியல்கள் விவரங்கள் (correlation statement) பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளின் விவரங்கள், இத்துறையின் முக்கிய அரசாணைகள், சுற்றறிக்கைகள், பரப்பளவு மற்றும் அளவு மாற்றங்கள் போன்றவை அறியலாம்.

எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் மற்றும் "தமிழ்நிலம்" செயலி மூலம் நிலஅளவைத் தொடர்பான விவரங்களை பார்வையிட்டு பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தகவல் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்காக தமிழ் மண்வளம்:

விளைநிலங்களின் மண்வளத்தை மேம்படுத்தும் வகையில், கடந்த 2022-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், "தமிழ் மண்வளம்" என்ற இணைய முகப்பு உருவாக்கப்படும் என்று வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அறிவித்து இருந்தார்அதன்படி, "தமிழ் மண்வளம்" எனும் இணைய முகப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி வைத்தார்.

விவசாயிகள் கணினி மூலமாகவோ அல்லது கைபேசி மூலமாகவோ http://tnagriculture.in/mannvalam/  எனும் இணையதள முகவரியில் தமிழ்மண் வளம் இணையதளத்தை அணுகலாம்.

இந்த இணைய முகப்பில், விவசாயிகள் தங்கள் மாவட்டம், வட்டாரம், கிராமம், தங்களது நிலத்தின் புல எண், உட்பிரிவு எண்ணை பதிவு செய்தால், உடனடியாக, மண் வளம் குறித்த அனைத்து விபரங்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டு, அவர்களது கைபேசியில் மண்வள அட்டையாக மின்னணு வடிவில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read also:

விவசாயிகளுக்காக John Deere டிராக்டர் நிறுவனம் எடுக்கும் முக்கிய முடிவு!

மரவள்ளிக் கிழங்கில் தேமல் நோய் வந்தால் என்ன செய்யலாம்?

English Summary: TN land survey website have including patta transfer facilities Published on: 19 January 2024, 11:48 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.