விவசாயிகள் புகார் தெரிவிக்கவும், விநியோகம் குறித்த விவரங்களைப் பெறவும் சென்னையில் உள்ள வேளாண்மை இயக்குனரகத்தில் உரம் வழங்குவதற்கான உதவி மையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இதில், தொடர்புக்கொள்ள மற்றும் வாட்ஸ்அப் மூலம் தகவல்களைப் பெற என பல முறையில் பயன்படுத்த, பிரத்யேக மொபைல் எண் (9363440360) அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயம் இந்திய நாட்டின் முதுகு எலும்பாக திகழ்கிறது, எனவே விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக பல முன் ஏற்பாடுகளை தொடர்ந்து ஒன்றிய அரசும் , மாநில அரசும் செய்து வருகிறது. மேலும், (Zero Budget) அதாவது இயற்கை விவசாயம் நோக்கி நகருமாறு பிரதமர் அறுவுறுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழக அரசின், இந்த புதிய முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது பாமர விவசாயும் போபைல், வாட்ஸ்அப் போன்ற தோழில் நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். ஆகவே அவர்களுக்கு இந்த சேவை, அவசியம் தேவை.
எனவே தான், வேளாண் உற்பத்தி ஆணையரும் செயலாளருமான சி.சமயமூர்த்தி, தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில்: 18.5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி உட்பட 46.2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன, மீதமுள்ளவை தினை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் கரும்பாகும்.
மாநிலத்தில் 8,100 தனியார் விற்பனை நிலையங்கள் மற்றும் 4,354 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் உரங்கள், யூரியா, டை-அமோனியம் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் ஆகியவற்றை 15 நிறுவனங்கள் மூலம் போதுமான அளவு விநியோகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில், உரம் வழங்குவது குறித்த தகவல்களைப் பெற விவசாயிகளுக்கு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து புகார்கள் மற்றும் கோரிக்கைகளை பெற ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேளாண் இணை இயக்குநர் அலுவலகங்களில் உர கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: