1. விவசாய தகவல்கள்

ஜீரோ பட்ஜெட் விவசாயம் குறித்து பிரதமர் உரையாற்றுவார்!

Deiva Bindhiya
Deiva Bindhiya

டிசம்பர் 16-ம் தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தின் பலன்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்து அவர்களை இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள ஊக்குவிப்பார் பிரதமர்.  விவசாயிகள் குறைவான ரசாயன உரங்களை பயன்படுத்தி இயற்கை முறையில் விவசாயம் செய்து பயனடைய வேண்டும் என்பதே அரசின், இந்த முயற்சியாகும். இவ்வாறு செய்வதினால், நாம் மண்ணின் வளத்தையும் பராமரிக்கலாம், அதே நேரத்தில், செலவு குறைவதால் விவசாய்களின் வருமானமும் அதிகரிக்கும்.

'ஆன்லைனில்' இயற்கை விவசாய முறைகள் குறித்து குஜராத் அரசு ஏற்பாடு செய்துள்ள விவசாய நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி டிசம்பர் 16ஆம் தேதி உரையாற்றுவார் என வேளாண் செயலர் சஞ்சய் அகர்வால் அறிவித்துள்ளார். இயற்கை விவசாயத்தை மையமாகக் கொண்ட, இந்த மூன்று நாள் நிகழ்ச்சி, (14-Dec-2021)செவ்வாய்க்கிழமையான இன்று முதல் குஜராத்தின் ஆனந்த் நகரில் தொடங்கிறது.

ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை ஊக்குவிக்க குழு அமைப்பின் தகவல்

இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்த எடுக்கப்படும், முதல் முயற்சி இது என்று சஞ்சய் அகர்வால் கூறினார். குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) மற்றும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் போன்ற விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை ஆராய "எதிர்காலத்தில்" ஒரு குழு அமைக்கப்படும் என்று வேளாண் செயலாளர் கூறினார். மேலும் அவர், இயற்கை விவசாயம் தற்போது முக்கியமான விவசாய நடவடிக்கையாக மாறியுள்ளது என்றார். "இது உற்பத்திச் செலவைக் குறைத்து, விவசாயிகளுக்கு வருமானத்தை அதிகரிக்க உதவும்". சுமார் 5,000 விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, (11-Dec-2021)சனிக்கிழமையன்று, உத்தரபிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றும்போது, டிசம்பர் 16 ஆம் தேதி, இயற்கை விவசாயம் குறித்து ஒரு பெரிய நிகழ்ச்சியை அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று அறிவித்தார். நமது தாய் பூமியை காபாற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது ஆகவே, இயற்கை விவசாயம் அதாவது ஜீரோ பட்ஜெட் விவசாயம், நமக்கு பேருதவியாக இருக்கும் என்றார். இந்த விவசாய முறையால் மண் வளம், தண்ணீர் சேமிப்பு என பல நன்மைகள் உள்ளன, மேலும் உற்பத்தியும் முன்பை விட அதிகரிக்கும். இயற்கை விவசாயம் குறித்து, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில், விவசாயிகள் கலந்து கொண்டு, தங்கள் வயல்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார் பிரதமர்.

மேலும் படிக்க:

3 முதல் 6ஆம் வகுப்பு வரை - பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை!

விலை சரிவால் வெங்காயத்தை தீயிட்டு கொளுத்திய விவசாயி!

 

English Summary: Prime Minister's will Speak on Zero Budget Agriculture! Published on: 14 December 2021, 01:39 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.