பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 24 July, 2022 10:55 AM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டாரத்தில் பாரம்பரியக் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20,,000 மானியம் வழங்கப்பட உள்ளதால், வாங்கிப் பயனடையுமாறு வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறிகள், பழங்கள், மலர்கள் சாகுபடி செய்ய மானியத்துடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு திட்டங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என கொடைக்கானல் தோட்டக்கலை தெரிவித்துள்ளது.

கொடைக்கானல் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறிகள், பழங்கள், மலர்கள் சாகுபடி செய்ய மானியத்துடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரூ.8,000

2022-2023 தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் வீரிய உயர் ரக காய்கறி விதைகள் பரப்பு விரிவாக்கத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இதேபோல், மிளகு சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் நாற்றுகளுடன் கூடிய மானியம் வழங்கப்பட உள்ளது.

அவக்கோடா கன்றுகள் ஒரு ஏக்கருக்கு ரூ.5,760 மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும் புதிதாக எலுமிச்சை, டிராகன்பழம், ஸ்டாபரி போன்ற பழ வகைகளின் உற்பத்தியை அதிரிக்க மானியம் வழங்கப்பட உள்ளது. பண்ணைக்குட்டை அமைத்திட ரூ.75 ஆயிரம் மானியமும், தேனீ வளர்ப்பதை ஊக்குவிக்க தேனீ வளர்ப்பு பெட்டிகளும் மானியத்தில் வினியோகிக்கப்பட உள்ளது.
சிப்பம் கட்டும் அறை ஒன்றுக்கு ரூ.2 லட்சமும், நிரந்தர மண்புழு கூடாரம் அமைக்க ஒரு எண்ணுக்கு ரூ.50 ஆயிரமும் மானியமாக வழங்கப்பட உள்ளது.

ரூ.20,000

பூண்டு, பழ பயிர் சாகுபடி மற்றும் பாரம்பரிய காய்கறிகள் பயிரிட ஒரு ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும். நிரந்தர பந்தல் அமைத்து காய்கறி பயிர் சாகுபடி செய்ய ஒரு ஹெக்டருக்கு ரூ.2 லட்சம் வரை மானியமும் விவசாய முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்த இன கவர்ச்சி பொறி மற்றும் மஞ்சள் ஒட்டுப்பொறி ஆகியவை மானியத்தில் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி

விவசாயிகள் உழவன் செயலி மூலமாக பதிவு செய்து கொண்டும் முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்வது அவசியம். தங்களது சிட்டா, அடங்கல், ரேசன் கார்டு, ஆதார் கார்டு நகல், புகைப்படம் 2, வங்கி கணக்கு முதல்பக்க நகல் ஆகியவற்றை சமர்ப்பித்தால் முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மானியங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்
துணை இயக்குனர்
தோட்டக்கலைத்துறை
கொடைக்கானல்

மேலும் படிக்க...

உணவுப் பொருட்களுடன் கூண்டு- சிக்கிக்கொண்ட 300 குரங்குகள்!

383 கிராமங்களில் விரைவு தபால் சேவை - அதிரடி நடவடிக்கை!

English Summary: Govt to provide Rs 20,000 to farmers - How to apply?
Published on: 24 July 2022, 10:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now