Farm Info

Tuesday, 28 December 2021 12:15 PM , by: Deiva Bindhiya

Great decline in banana production, due to Omicron

மஹாராஷ்டிர விவசாயிகளின் பிரச்னைகள் தீர்வதாகவே தெரியவில்லை. வாழை இலையில் இருந்து, வாழைப் பூ, வாழைத் தண்டு, வாழைப் பழம் என அனைத்தும் நாம் உபயோகித்தும், வாழையின் சந்தை விலை குறைவால் வாழை உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

 

முன்பு இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தற்போது ஓமிக்ரான் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓமிக்ரான் தோற்றால் விவசாய வியாபாரம் பெரிதும் பாதிக்க துவங்கியுள்ளது. ஏற்கனவே வாழை விலை குறைந்துள்ள நிலையில், விவசாயிகள் தவிக்கின்றனர். எதிர்காலத்தில் வாழைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலையும் உயரும், ஆனால், தற்போது வாழையை விவசாயிகள் பயிரிடுவார்களா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. கோலாப்பூர் மாவட்டத்தில் டன் ஒன்றுக்கு ரூ. 3,000 என்ற விற்பனை செய்யப்படுகிறது. சில விவசாயிகள் அதிக செலவு செய்து, எதிர்கால இழப்புகளைத் தவிர்க்க பயிர் முறையை நேரடியாக மாற்றுவதைக் காணலாம்.

வாழை செடியை தூக்கி எறிய வேண்டிய கட்டாயம். ஏன்?( Forced to throw away the banana plant. Why?)

பருவநிலை மாற்றம் காரணமாக, வாழை விலையில் ஏற்ற இறக்கம் இருப்பதால், விவசாயிகள் மனதில் வாழை பயிரிடுவதைப் பற்றி நிறைய கேள்வி எழும்பியுள்ளது. இந் நிலையில் வாழைக்கன்றுகளுக்கு வாடிக்கியாளர்களும் இல்லை. இதனால் வாழை விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழைக் கன்றுகளை வாங்கச் சொல்லி, வாழைத்தார்களை விற்ற பின் பணம் தருமாறு, பல ஆய்வக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தும், விவசாயிகள் சாகுபடி செய்யத் தயாராக இல்லை. சீசன் துவக்கத்தில், எதிர்பார்த்த அளவு வாழைக்கான வாடிக்கையாளர்கள்  கிடைக்காததால், மராத்வாடாவிலும் ஏராளமானோர் தங்களது வாழைத் தோட்டத்தை வெட்டி சாய்த்துள்ளனர், மேலும் ஓமிக்ரான் தாக்குதலால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கனமழையால் வாழைத்தோட்டங்கள் பலத்த சேதம் அடைந்தன(Banana plantations were badly damaged by heavy rains)

ஜூலை மாதத்தில், மேற்கு மகாராஷ்டிராவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வாழைத்தோட்டங்கள் பெருமளவில் சேதமடைந்தன என்பது குறிப்பிடதக்கது. வாழையின் சந்தை விலை ஏற்க கூடிய அளவில் இல்லாததால், வாழை சாகுபடிக்கு பதிலாக வாழைத்தோட்டத்தை வெட்ட விவசாயிகள் தேர்வு செய்தனர். ஆண்டின் எந்த காலத்திலும் பயிரிடப்படும் பயிரில் வாழையும் ஆகும், இருப்பினும் இதற்கான பருவம் என்று கருதப்படுவது ஜூன் மாதம் ஆகும். ஆகஸ்ட் மாதம் முதல், விவசாயிகள் சாகுபடிக்கு எந்த பதிலும் அளிக்காததால், இப்பகுதியில் வாழை வரத்து குறைந்துள்ளது.

வாழை விவசாயிகள் தற்போது வேறு பயிர் சாகுபடிக்கு மாறியுள்ளனர்(Banana farmers have now switched to a different crop)

மேற்கு மகாராஷ்டிர விவசாயிகள் புதிய வாழைப்பயிரில் வாழை பயிரிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், சந்தை நிலவரத்தாலும், ஓமிக்ரானின் பெருக்கத்தாலும், விவசாயிகள் தங்கள் திட்டத்தை மாற்றிவிட்டனர். ஏனென்றால், வாழை நடவு செய்தாலும், எதிர்பார்த்த விலையும், ஓமிக்ரானும் சந்தை விலையை உயர்த்தாததால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாமல் விவசாயிகள், நஷ்டம் அடைய வரும்பவில்லை. இந் நிலையில், மரக்கன்றுகள் விற்பனை செய்யப்படாததால் மாநிலத்தில் 35 ஆய்வகங்களில் 7 ஆய்வகங்கள் மூடப்பட்டுள்ளன.

 

மேலும் படிக்க:

ஆன்லைனில் மாடித் தோட்டத்திற்கான விதைகள் மற்றும் செடிகள் மானிய விலையில்!

மீண்டும் ரூ.100யை எட்டும் தக்காளி - தவிக்கும் இல்லத்தரசிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)