1. வாழ்வும் நலமும்

நீண்ட ஆயுளைப் பெற வாழை இலைக்கு மாறுங்கள்!- நோய்களுக்கும் குட்பை சொல்லலாம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Billion benefits of Banana Leaf

Credit: Medium

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியானாலும், வாழை இலையில் வகைவகையாகப் பரிமாறி விருந்தினர்களை வியப்பில் ஆழ்த்துவது தமிழர்களின் கலாச்சாரம்.

ஏனெனில் பலவகை உணவுகளைக் பரிமாற வாழை இலையே சிறந்தது என்பதை விட, வயிறார உண்டு மகிழும் விருந்தினர்கள், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதுதான் இதன் தார்ப்பரியம்.

அதுமட்டுமல்ல, வாழை இலை பலவித மருத்துவ நன்மைகளை தன்னுள் தக்கவைத்துக் கொண்டுள்ள பொக்கிஷம். அதன் மகத்துவங்களில், சிலவற்றை உங்கள் கவனத்திற்கு பட்டியலிட்டுள்ளோம்.

வாழை இலையின் மருத்துவப் பயன்கள்(Medical benefits)

நச்சு முறிப்பான்

வாழை இலைப் படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் மிகச்சிறந்த நச்சு முறிப்பான்கள். அதனால்தான் இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகி நச்சை முறிக்கிறார்கள்.

தொற்று பரவாமல் இருப்பதற்காக, திருமணப் பந்தல் உட்பட மக்கள் கூடும் எந்த திருவிழாக்களிலும், எல்லா இடங்களில் வாழை மரத்தைக் கட்டி வைக்கின்றனர்.

Credit: PANICA EXPORTS

சரும பராமரிப்பு

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

ரத்தம் சுத்தம் (Clean the blood)

வாழை இலையில் உண்பதால், ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றப்பட்டு, ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

ஜீரணத்தைத் தூண்டுகிறது (Digestion)

வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியாக்கள் அழிக்கும் தன்மை கொண்டவை. அதனால் நச்சுக்களை அகற்றி, ஜீரணத்தைத் தூண்டிவிடுகின்றன.

அல்சருக்கு மருந்து (Remedy for Ulcer)

வாழை இலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை, உணவை எளிதில் ஜீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும்.

சிறுநீரகக் கல் (Kidney Stone)

வாழை இலையில் சாப்பிடுவது, சிறுநீரகத்தில் சேரும் கல் உள்ளிட்ட சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்கு தீர்வாக அமைவதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்யும்.

புற்றுநோயைத் தடுக்கிறது (Prevent Cancer)

நாம் சாப்பிடும் சில்வர் தட்டை சோப்பு போட்டு கழுவுகிறோம். அதில் தங்கிவிடும் சிறிய அளவிலான ரசாயனம், உடலில் சென்று புற்றுநோய் மற்றும் வயிறு தொடர்பான நோய்களுக்கு அடித்தளம் அமைக்கிறது. இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை வாழை இலைக் காக்கிறது.

Credit:FoodGuruz

பார்க்கின்சன் நோய்க்கு மருந்து

வாழை இலையில் உள்ள பாலிபினால் (Polyphenol) எனப்படும் ஆக்ஸிடன்ட்கள் பார்க்கிசன் நோய்க்கு (Parkinson’s disease) மருந்தாகப் பயன்படுகின்றன.

இளநரைக்கு குட்பை

வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் தடுத்து, தலைமுடியை நீண்டநாட்கள் கருப்பாக வைத்துக்கொள்ள முடியும்.

கூடுதல் சுவை

வாழை இலையின் மேற்புறத்தில் உள்ள (wax coating) என்ற மெழுகு பூச்சு, அதில் பரிமாறப்படும் உணவுக்கு கூடுதல் சுவையைக் கொடுக்கிறது.

இவை அனைத்திற்கும் மேலாக, வாழை இலை சுற்றுச்சூழலுக்கு உகந்தது. ரசாயனக் கலப்பு இல்லாதது. இதில் இடம்பெற்றுள்ள கிரீன் டீக்கு (Green Tea)நிகரான பாலிபினால்கள் (Polyphenols) உடலில் நச்சுத்தன்மை உருவாவதைத் தடுத்து, நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.

எனவே நீண்ட ஆயுளோடு வாழ இனி, வாரத்தில் 3 நாட்களாவது வாழை இலையில் சாப்பிட்டு, ஆரோக்கியத்தை நம்வசப்படுத்துவோம்.

மேலும் படிக்க...

பொள்ளாச்சி இளநீரே!... இளநீரின் அசத்தல் பயன்கள்!

இளமையைத் தக்க வைக்க உதவும் இஞ்சி-பூண்டு விழுது!- மணக்கும் அளப்பரியப் பயன்கள்!

English Summary: Switch to banana leaf for longevity!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.