பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 13 December, 2021 5:09 PM IST
Pm Kisan

டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் தலைமையில் விக்யான் பவனில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது - இப்போது வங்கி மூழ்கினால் 5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் சுமார் 11ஒன்றை கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 1.62 லட்சம் கோடி ரூபாயை மோடி அரசு டெபாசிட் செய்துள்ளதாக மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.  முன்பு தில்லியில் இருந்து 100 ரூபாய் அனுப்பினால், 15 ரூபாய்தான் அடிமட்டத்தை எட்டும் என்று அப்போதைய பிரதமர் சொல்லும் காலமும் இருந்தது. ஆனால் இன்று இவ்வளவு பெரிய திட்டத்தின் கீழ் இவ்வளவு பெரிய தொகையை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும் போது இடைத்தரகர்களே இல்லை. ஒரு தவணையில் அரசு  இரண்டாயிரம் ரூபாய் டெபாசிட் செய்தால், அந்த மொத்த தொகை இரண்டாயிரமும் பயனாளிகளுக்கு சென்றடைகிறது.

ஞாயிற்றுக்கிழமை(12-Dec-2021) விக்யான் பவனில் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் அதாவது (DICGC) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தோமர் தனது உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாத காலக்கெடுவில் வைப்புத்தொகை, காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. மேலும் அவர் பேசுகையில், மோடி அரசு பல சீர்திருத்த முடிவுகளை எடுத்துள்ளது என்று கூறினார். மோடி அரசு ஆட்சிக்கு வரும்போது, மக்கள் தொகையில் பாதி பேருக்கு மேல் சொந்த வங்கிக் கணக்கு கூட இல்லாமல் இருந்தனர், இந்நிலையில் வளர்ந்த நாடு என்ற கனவை எப்படிப் பார்க்க முடியும்.

வங்கி மூழ்கினால் ரூ.5 லட்சம் கிடைக்கும் என உத்தரவாதம்

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், நமது நாட்டில் வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களுக்கான காப்பீட்டு முறை 60களில் உருவாக்கப்பட்டதாகும். முன்னதாக, வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில், 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே உத்தரவாதம் அளிக்கப்பட்டது. பின்னர் இது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.  அதாவது, வங்கி மூழ்கினால், டெபாசிட் செய்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும் என்ற விதிமுறை இருந்தது.  இந்தப் பணம் எப்போது பெறப்படும் என்பதற்கானம காலக்கெடும் விதிக்கப்படவில்லை.  ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கவலையை கருத்தில் கொண்டு மீண்டும் இந்த தொகையை தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளோம் என்றார் அவர்.

இந்தத் தொகை 90 நாட்களில் பெறப்படும்

சட்டத்தில் திருத்தம் கொண்டு மற்றொரு பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு இல்லாத நிலையில், இப்போது 90 நாட்களுக்குள் அதாவது 3 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்துவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.  வங்கி மூழ்கினால் கூட, டெபாசிட் செய்தவர்கள் 90 நாட்களுக்குள் தங்கள் பணத்தை திரும்பப் பெறுவார்கள். கடந்த சில நாட்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டெபாசிட்தாரர்கள், பல ஆண்டுகளாக பணத்தை தேக்கி வைத்துள்ளனர்.  இந்த தொகை ரூ.1300 கோடிக்கும் அதிகம் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கவர்னர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  குணாவின் நிகழ்ச்சியில், பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா, பிராந்திய எம்எல்ஏக்கள் கோபிலால் ஜாதவ், கஜேந்திர சிகர்வார், எஸ்பிஐ தலைமை பொது மேலாளர் பினோத் குமார் மிஸ்ரா, பொது மேலாளர் சஞ்சீவ் குமார் தத்தா, துணை பொது மேலாளர் பர்விந்தர் பார்தி, பிராந்திய மேலாளர் சஞ்சய் பேஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க:

மீன் வளர்க்கும் விவசாயியா நீங்கள்?உங்களுக்கு மானியத்துடன் 2 புதிய திட்டங்கள்!

புதிய மின் மோட்டார் வாங்க விவசாயிகளுக்கு ரூ.10,000 மானியம்

English Summary: Guarantee of Rs 5 lakh in case of bank get closed
Published on: 13 December 2021, 10:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now