1. விவசாய தகவல்கள்

மீன் வளர்க்கும் விவசாயியா நீங்கள்?உங்களுக்கு மானியத்துடன் 2 புதிய திட்டங்கள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Are you a fish farmer? 2 new projects with subsidy for you!

தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு மீன்வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் 2 புதியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

ஆதரவுத் தொழில்  (Support industry)

மீன்வளர்ப்பும் ஒருவகையில், விவசாயத்தின் ஆதரவுத் தொழில்தான். ஏனெனில் விவசாயம் பொய்க்கும் காலங்களில் நம்முடையப் பொருளாதாரத் தேவையின் சிலப் பகுதியைப் பூர்த்தி செய்ய மீன்வளர்ப்பு உதவும்.

இதனைக் கருத்தில்கொண்டு,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் தென்காசி மாவட்டத்தில் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மீன் குளம் அமைத்து, மீன் வளர்த்து வரும் விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்துடன் கூடிய 2 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

மானியம் (Subsidy)

  • இதன்படி, பண்ணைக் குட்டைகளில் நீர் சேமிப்பு திறனை மேம்படுத்த பாலித்தீன் உறைகளிட்டு மீன் வளர்ப்பு மேற்கொள்ள 40 சதவீத மானியமாக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும்.

 

விரால் மீன் வளர்ப்புக்கு 40 சதவீத மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.

முன்னுரிமை (Priority)

இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு ஏற்றவாறு திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி தகுந்த பயனாளிகளின் விண்ணப்பங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் பராமரிக்கப்பட்டு முன்னுரிமை வழங்கப்படும்.

தகுதி (Qualification)

இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு சொந்த நிலத்தில் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மீன் வளர்த்து வருபவராக இருக்க வேண்டும். மாவட்ட மீன் வளர்ப்பு முகமையில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

யாருக்குக் கிடைக்காது?(Who does not get it?)

கடந்த 2018-19 முதல் 2020-21 வரையுள்ள காலங்களில் மத்திய, மாநில அரசிடம் இருந்து உள்ளீட்டு மானியம் பெற்ற விவசாயிகள் இத்திட்டத்தில் மானியம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 42 C. 26-வது குறுக்குத் தெரு, மகாராஜா நகர், திருநெல்வேலி 627011 என்ற அலுவலக முகவரியில் அல்லது 0462 2581488 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

காலக்கெடு (Deadline)

பின்னர் விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் டிசம்பர் 17-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

பூச்சிமருந்து அடிக்கும் தேனீக்கள்- மாற்றிச் சிந்தித்த விஞ்ஞானிகள்!

நெல் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கு வித்திடும் நுண்சத்துக்கள்!

English Summary: Are you a fish farmer? 2 new projects with subsidy for you! Published on: 13 December 2021, 10:07 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.