நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 December, 2021 12:16 PM IST
Haboos mangoes that arrived before the season

மகாராஷ்டிராவில் பெய்த பருவமழையால் இந்த ஆண்டு பயிர்கள் மற்றும் தோட்டக்கலைகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், மறுபுறம் மாறிவரும் சுற்று சூழலால் பல மாவட்டங்களில் மா பழங்களில் கற்பா நோய் தாக்கியதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் இந்த ஆண்டு உற்பத்தி பெருமளவு குறையும் என விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர். இந்த முறை மாம்பழங்கள் சந்தைகளுக்கு தாமதமாக வந்து சேரும் என அவர்கள் கூறியிருந்தனர். ஆனால் தற்போது வாஷி ஏபிஎம்சி மார்க்கெட்டில் மாம்பழங்களின் ராஜா ஹபுஸ் வரத்து தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் கொங்கனில் இருந்து அப்பூஸ் மாம்பழங்களின் வரத்து வாஷி ஏபிஎம்சி சந்தையில் தொடங்கும் என்பது குறிப்பிடதக்கது. ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மூன்றாவது வாரத்தில் இருந்து, தேவ்கரின் அப்பூஸ் மாம்பழங்கள் வாஷியின் ஏபிஎம்சி சந்தையை வந்தடைகின்றன என்பதில் மிக்க மகிழ்ச்சி.

எனவே இனி அப்பூஸ் மாம்பழத்தின் இனிப்பை ருசிக்க மக்கள் காத்திருக்க தேவையில்லை, அப்பூஸ் பழங்கள் நிறைந்த மூன்று பெரிய பெட்டிகள் சந்தைக்கு வருகை தந்துள்ளன. ஒரு பெட்டிக்கு, 2,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

மா விவசாயிகள் பெரும் நஷ்டம். காரணம் என்ன?( Mango farmers suffer huge losses. What is the reason?)

இங்குள்ள சந்தைக்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் அப்பூஸ் மாம்பழங்களின் வரத்து தொடங்கினால் போதும், மாம்பழ சீசன் தொடங்கிவிட்டது என்று தெரிந்துக்கொள்ளலம். பல்வேறு மாம்பழ வகைகளின் வருகை மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் தொடங்குகிறது. ஆனால், கடந்த ஆண்டு கரோனாவால், போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டது, ஆகையால் மாம்பழம் சீசனில் வரவில்லை. ஊரடங்கு காரணமாக மாம்பழங்களின் வரத்து குறைந்தது. இதனால், விவசாயிகளுக்கு அப்பூஸ் மாம்பழம் சீசன் பறிபோனது. அதேசமயம், 2021ல், பருவமழை பொய்த்ததால், 80 சதவீத மா தோட்டங்கள் அழிந்தன, இது விவசாயிகளை பெரும் மன அழுத்ததிற்கு ஆளாகியுள்ளன.

முதல் சரக்கு மாம்பழங்கள் வாஷியின் ஏபிஎம்சியை அடைந்தது (The first consignment of mangoes reached Vashi's ABMC)

அப்பூஸின் சீசனுக்கு முன்பே அப்பூஸ் மாம்பழங்கள் சந்தையை வந்தடைந்தன. கொங்கனில் இருந்து வந்த முதல் சரக்கு இதுவாகும். தேவ்கர் கிராமத்தில் இருந்து ஹபுஸின் மூன்று பெட்டிகள் வாஷிக்கு வந்துவிட்டன. இந்த மாம்பழத்தின் சராசரி விலை ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பழச் சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அப்பூஸ் மாம்பழத்தின் சிறப்பு (The specialty of Haboos mango)

அப்பூஸ் மாம்பழம் ஆங்கிலத்தில் அல்போன்சோ மாம்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் எடை சுமார் 150 முதல் 300 கிராம் வரை இருக்கும். இது மற்ற மாம்பழங்களிலிருந்து இனிப்பு, சுவை மற்றும் வாசனை ஆகியவற்றில் முற்றிலும் வேறுபட்டதாகும். மாம்பழம் பழுத்து ஒரு வாரமாகியும் கெட்டுப் போகாது என்பது இதன் மிகச் சிறப்பான அம்சம் ஆகும். இதனால், ஏற்றுமதி செய்வதில் அதிக பிரச்னை இல்லை என்பது குறிப்பிடதக்கது. ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களில் அல்போன்சா மிகப்பெரியப் பங்கு வகிக்கின்றது. இந்த மாம்பழத்தின் சிறப்புக்கேற்ப இதன் விலையும் இருக்கும், மற்ற மாம்பழங்களை விட, இது அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்த மாம்பழத்திற்கு ஜிஐ டேக் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடதக்கது. கோடைக் கால்த்தில் மாம்பழ குளிர்பானங்கள் விளம்பரத்தில், ஆங்கிலத்தில் அல்போன்சோ மாம்பழம் என்று அழைக்கப்படும் இந்த அப்பூஸ் மாம்பழங்களே இடம்பெறுவதும் குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

பிரதமர் பரிசு: தேங்காய் குவிண்டாலுக்கு ரூ.255 உயர்வு

தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை: முதல்வர் தொடக்கி வைக்கிறார்!

English Summary: Haboos mangoes that arrived before the season
Published on: 23 December 2021, 12:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now