1. விவசாய தகவல்கள்

பிரதமர் பரிசு: தேங்காய் குவிண்டாலுக்கு ரூ.255 உயர்வு

Deiva Bindhiya
Deiva Bindhiya

Prime Minister's gift: Coconut per quintal Rs 255 increase

பிரதமர் நரேந்திர மோடி அரசு தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.255ஆக உயர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2022 சீசனுக்கான தேங்காய்கள் மீது MSPயை அதிகரிக்க ஒப்புதல் அளித்தது.

நியாயமான சராசரித் தரத்தின் (FAQ) உரிக்கப்பட்ட தேங்காய்களுக்கான MSP 2021 இல் குவிண்டால் ஒன்றுக்கு 10,335 ரூபாயில் இருந்து 2022 சீசனில் குவிண்டால் ஒன்றுக்கு 10,590 ரூபாயாகவும், உரித்திடாத தேங்காய்களுக்கான MSP 2021இல்,  குவிண்டால் ஒன்றுக்கு 10,600 ரூபாயிலிருந்து 2022சீசனில் 11,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இதன் மூலம் உரித்த தேங்காயின் மீது 51.85 சதவீதமும், உரித்திடாத தேங்காயின் மீது 57.73 சதவீதமும், இந்தியாவின் மொத்த சராசரி உற்பத்திச் செலவைக் காட்டிலும் லாபத்தை உறுதி செய்கிறது. 2022 சீசனுக்கான தேங்காய்கள் மீது MSPயின் அதிகரிப்பு, 2018-19 பட்ஜெட்டில் அரசால் அறிவிக்கப்பட்ட அகில இந்திய எடையுள்ள சராசரி செலவை விட குறைந்தபட்சம் 1.5 மடங்கு அளவில் நிர்ணயிக்கும் கொள்கைக்கு ஏற்ப உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இந்த முடிவு CACP இன் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டதா?( Is this decision based on the recommendations of the CACP?)

விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் (CACP) பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான முக்கியமான மற்றும் முற்போக்கான சிந்தனைகளில் இதுவும் ஒன்றாகும், இது குறைந்தபட்சம் 50 சதவீத லாபத்தை உறுதி செய்கிறது. இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் மற்றும் இந்திய தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு ஆகியவை தென்னை வளரும் மாநிலங்களில் MSPயின் ஆதரவு விலையை நிர்வகிப்பதற்கான மத்திய முகமை நிறுவனங்களாக தொடர்ந்து செயல்படும்.

இந்தியாவில் தென்னையின் முக்கியத்துவம்( Importance of Coconut in India)

தேங்காய் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதாவது ஜிடிபியில் தென்னையின் பங்களிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் ஆகும். நாட்டின் சுமார் 12 மாநிலங்களில் தென்னை பயிரிடப்பட்டு, ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இந்தப் பயிரை நம்பி வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது. இந்த மக்கள் MSP இன் அதிகரிப்பால் பயனடைவார்கள் மற்றும் அவர்களின் வருமானமும் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் படிக்க:

தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை: முதல்வர் தொடக்கி வைக்கிறார்!

வேகமாக பரவும் ஓமிக்ரான்! இந்தியாவில் 213 தொற்று உறுதி

English Summary: Prime Minister's gift: Coconut per quintal Rs 255 increase

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.