வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் இன்று ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தொடரும் கனமழை (Continuing heavy rain)
வடகிழக்குப் பருவமழை ஒருபுறம் என்றால், வங்கக்கடல் காற்றழுத்தத் தாழ்வு மறுபுறம் என தமிழகத்தின் பல மாவட்டங்களை கனமழைத் துவம்சம் செய்து வருகிறது.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தீவாக மாறிப்போன நிலையில், பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியிருக்கின்றன. அப்பாடா என மக்கள் மூச்சு விடுவதற்குள் அடுத்தடுத்து தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ளன.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
அடுத்துடுத்து தாழ்வு
குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மத்திய அந்தமான் கடற்பகுதியில் நிலவுகிறது. இதுதவிர மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தென்கிழக்கு அரபிக் கடலில் இருந்து வட கேரளா, தென் கர்நாடகா, மற்றும் வட தமிழகம் வழியாக தென்மேற்கு வங்கக் கடல் வரை (4.5கி.மீ உயரம் வரை) நிலவுகிறது.
கனமழை (Heavy rain)
இதன் காரணமாக, தமிழ்நாடு புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் அனேக இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
பின்வரும் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
ஈரோடு
-
நீலகிரி
-
கோவை
-
தேனி
-
திருப்பூர்
-
சேலம்
-
தர்மபுரி
-
நாமக்கல்
-
கள்ளக்குறிச்சி
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
அரபிக்கடல் பகுதிகள் (Areas of the Arabian Sea)
கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.
இவ்வாறு இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
கொரோனா தடுப்பூசி போடவில்லையா? - இனி ரேஷன் பொருட்கள், கியாஸ், பெட்ரோல் கிடையாது!