1. விவசாய தகவல்கள்

மழையை அளக்க நீங்க ரெடியா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Are you ready to measure the rain?
Credit : Dinamlar

மழைக் காலத்தில், எவ்வளவு சென்டிமீட்டர் மழை பதிவாயிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள நம் அனைவருக்குமே ஆர்வமாக இருக்கும்.

மழை மழை 

இருந்தாலும் வானிலை மையம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டால்தான் நம் பகுதியில் எவ்வளவு மழை பதிவாகியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.ஆனால் நம் பகுதியில் பெய்யும் மழையை நாமேக் கணக்கிட்டால் எப்படி இருந்தால் எப்படியிருக்கும். ஆம்.

உங்கள் பகுதியில் பெய்யும் மழையைக் கணக்கிடுவது எப்படி என்றுத் தெரிந்துகொள்ள உங்களுக்கு விருப்பமா? உங்களுக்காகவே இந்த தகவலைத் தருகிறோம்.

மீ.மி மழை என்பது எவ்வளவு?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், அதி கனமழை கொட்டித் தீர்த்த வருகிறது.  இப்படி மழை பெய்யும்போதெல்லாம் 10.மி.மீ மழை பெய்தது, 15மி.மீ மழை பெய்தது என்று தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் வாயிலாக கேட்கிறோம் ,படிக்கிறோம். அப்படி என்றால் எ‌வ்வளவு மழை பெய்திருக்கும் என்று தெரியுமா? பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.
உண்மையில் ஒரு மீ.மி மழை என்பது எவ்வளவு?

1 மி.மீ மழை பெ‌ய்தது என்றால் 1 சதுரமீட்டருக்கு ஒரு லிட்டர் மழை நீர்
என்று பொருள். அதுவும் ஓர் இடத்தில், ஒரே சமயத்தில் பெய்த மழை அளவை வைத்து சொல்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது. சுமார் 20-30கி.மீ இடையிலான மொத்த பரப்பில் பெய்த மழையின் அளவுகளைப் பல்வேறுபட்ட இடங்களில் மழை மானியைக் கொண்டுக் கணக்கிடுகிறார்கள்.

அதுவும் 24மணிநேரத்திற்கு ஒருமுறைமழையின் அளவை எடுத்து அவற்றின் மொத்த சாரசரி தான்,இவ்வளவு மி.மீ மழை பெய்தது என்று சொல்லப்படுகிறது. முதன்முதலாக மழை அளவை கணக்கிடும் முறையை கொரிய மன்னர் செஜாங் கண்டுபிடித்தார். இவர் மண்ணைத் தோண்டி மழை யின் ஈரத்தை வைத்து உழவு செய்ய கூறினார்.

மழை மானி

தற்போது உலகெங்கும் பயன்படுத்த கூடிய மழை மானியை 1662ம் ஆண்டு  கிருஷ்டோபர் ரென் என்பவர் கண்டுப்பிடித்தவர்.

4.5லிட்டர் தண்ணீர்

நமது விவசாயிகள் அந்த காலத்துலேயே ஆட்டுகலில் தேங்கியுள்ள தண்ணீரை கொண்டு ஒரு உழவு மழை, இரண்டு உழவு மழை என்று கணக்கிட்டனர் .
உழவு மழை என்பது ஒரு சதுர அடி பரப்பில் 4.5லிட்டர் தண்ணீர் என்று அர்த்தம்.

அதிகப்படியாகப் பெய்கின்ற மழை நீரை சேமித்து வைக்க, வயல்களில் ஆங்காங்கு பண்ணைக் குட்டைகளை அமைப்போம்.

தகவல்
அக்ரி.சு சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289

மேலும் படிக்க...

புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

கொரோனா தடுப்பூசி போடவில்லையா? - இனி ரேஷன் பொருட்கள், கியாஸ், பெட்ரோல் கிடையாது!

English Summary: Are you ready to measure the rain? Published on: 15 November 2021, 07:41 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.