வளிமண்டல சுழற்சி காரணமாக,வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வளிமண்டல சுழற்சி (Atmospheric cycle)
வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசைக் காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி மற்றும் கீழடுக்கில் கிக்கு திசைக் காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக பிப்ரவரி20ம் தேதியான இன்று
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழைக்கு வாய்ப்பு (Chance of heavy rain)
அதேநேரத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
21.02.21
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை (Chennai)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
முன்னறிவிப்பு (Forecast)
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மழைபதிவு (Rain)
அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 9 சென்டிமீட்டரும், குன்னூரில் 7 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவுமில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுமா?
நல்லபாம்பு விஷத்தின் மதிப்பு தெரியுமா?
PM Kisan: 70 லட்சம் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.18,000 - அமித்ஷா தகவல்!