Farm Info

Wednesday, 18 May 2022 12:37 PM , by: Poonguzhali R

விவசாயமே இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கின்றது. அத்தகைய விவசாயத்தினை மேம்படுத்துவதற்கு அரசுகள் பல்வேறு செயல்பாடுகளைச் செய்து வருகின்றது. அந்த நிலையில் விவசாயத்திற்கு உதவக் கூடிய வேளாண் இயந்திரங்களைக் குறைந்த வாடகையில் வாங்க அரசு இ-வாடகை செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த செயலியைப் பயன்படுத்துவது எப்படி என்பதைக் குறித்து இப்பதிவு விளக்குகிறது.

விவசாயம் செய்ய வேளாண் பொருட்கள் என்பவை அவசியமான ஒன்று ஆகும். பெரும்பாலான விவசாயிகளிடம் நிலம் இருந்தாலும் வேளாண் கருவிகள் சொந்தமாக இருப்பது இல்லை. அந்த சூழலில் விவசாயிகள் அதிக பணம் கொடுத்து வாடகைக்கு வேளாண் கருவிகளை வாங்க வேண்டி இருக்கிறது. இந்த நிலையைப் போக்கத்தான் அரசின் இ வாடகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இ- வாடகை திட்டம் மூலம் விவசாயிகள் குறைந்த விலையில் வேளாண் கருவிகளை வாடகைக்குப் பெறலாம். இந்த செயலி மூலம் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொண்டு முன்பதிவு செய்வதன் மூலம் குறைந்த விலையில் தங்களுக்குத் தேவையான வேளாண் கருவிகளை வாடகைக்குப் பெறலாம்.

செயல்முறை

  • நவீன வேளாண் இயந்திரங்களை வாடகைக்குப் பெறுவதற்கு முன்பதிவு செய்தல் வேண்டும்.
  • ’உழவன்’ செயலியின் முகப்புப் பக்கத்திற்குச் செல்லுதல் வேண்டும்.
  • ’வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பின்பு ‘வேளாண் பொறியியல் துறை-இயந்திரங்கள் வாடகைக்கு’ என்பதைத் கிளிக் செய்ய வேண்டும்.
  • அங்கு ‘முன்பதிவிற்கு என்பதை கிளிக் செய்து முன்பதிவு செய்ய வேண்டும்.
  • இப்போது வேளாண் இயந்திரங்கள் வாடகை விபரம் வரும்.
  • இதில் உங்களுக்குத் தேவையான கருவைகளைத் தேர்வு செய்யலாம்.
  • நீங்கள் எந்த பகுதியைச் சார்ந்தவராக இருக்கின்றீர்களோ அப்பகுதியின் முழு விவரங்களைப் பூர்த்திச் செய்ய வேண்டும்.
  • உதாரணமாக, நிலம் இருக்கும் மாவட்டம், வட்டம், கிராமத்தின் பெயர், நிலத்தின் புல எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
  • முக்கியமாக, கருவிகள் எந்த நாளில், எந்த நேரத்தில் தேவை என்பதைக் குறித்த விபரங்களையும் குறிப்பிடுதல் அவசியமாகும்.
  • வாடகைக்கு எடுக்கும் நேரத்தைப் பொறுத்து வாடகை விபரம் திரையில் தெரியும்.

அதன் பின்பு முன்பதிவை உறுதி செய்ய வேண்டும்.
வாடகைக் கட்டணத்தைச் செலுத்தி அந்த கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீதினைப் பெற வேண்டும்.

நீங்கள் கேட்ட வேளாண் கருவிகள், கேட்ட நாளில் உங்கள் இடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதோடு, சிறுபாசனத் திட்டத்துக்குத் தேவையான கருவிகளையும் இந்த செயலி மூலமாக வாடகைக்குப் பெறலாம் எனக் கூறப்படுகிறது.

எனவே, விவசாயிகள் அவர்களுக்குத் தேவையான இயந்திரங்களைக் குறைந்த வாடகையில் பெற்று பலன் பெறுங்கள்.

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வாங்க மானியம்! இன்றே விண்ணப்பியுங்கள்!!

சிறு தொழில் தொடங்க 10 லட்சம் பெறலாம்! விவரம் உள்ளே!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)