
விதை நெல் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், சான்று பெற்ற தரமான விதை நெல் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், என விதை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, விதை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
குறுவை சாகுபடி
குறுவை நெல் சாகுபடி பணி தற்போது துவங்கியுள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான விதை நெல் விற்பனையின் போது, கொள்முதல் பட்டியலில் விதை விற்பனை உரிமம் எண். ரகம், குவியல் எண், காலாவதி நாள் உட்பட அனைத்துத் தகவல்களும் இடம் பெற்றிருக்க வேண்டும்.
சான்று அட்டை குறிப்பாக ஆதார நிலை மற்றும் சான்று நிலை விதைகளையே விற்பனை செய்ய வேண்டும்.
சான்றிதழ் கட்டாயம் (Certification is mandatory)
விதை விற்பனையாளர்கள் விதையின் தரத்தை உறுதிப் படுத்தும் வகையில், குவியல் வாரியாக விதை மாதிரி பரிசோதனை செய்த முடிவு அறிக்கை மற்றும் பதிவுச்சான்றிதழ் ஆகியவற்றை, கண்டிப்பாகக் கடையில் வைத்திருக்க வேண்டும்.
நடவடிக்கை பாயும் (The action will flow)
தர பரிசோதனை அறிக்கை, பதிவுச்சான்றிதழ் இல்லாத விதைகளை விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது விதைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
உரிமம் பெற்ற இடத்தில் (Where licensed)
விதை விற்பனையாளர்கள் கொள்முதல் செய்த விதைகளைப் பாதுகாப்பாகவும், முறையாகவும், விதை விற்பனை உரிமம் பெற்ற இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
விற்பனை ரசீது (Sales Receipt)
விவசாயிகளுக்கு, விதை விற்பனை செய்யும் போது, விற்பனை ரசீது கொடுக்க வேண்டும். அதில், விதையின் பெயர், ரகம், குவியல் எண். காலாவதி நாள் ஆகியவற்றுடன், விவசாயி பெயர், முகவரி மற்றும் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும்.
ஆய்வு (Inspection)
இந்த விதிகளை மீறும் விதை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அதிகாரிகள் அதிரடி ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்! முதல்வர் எச்சரிக்கை!
4941 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்திற்கு விநியோகம்! மத்திய அரசு தகவல்!
பள்ளிகள் தற்போது திறக்கப்படாது! பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு!