1. தோட்டக்கலை

உரத்திற்கான மானியம் உயர்வு- பழைய விலையில் விற்பனை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

மத்திய அரசு, உரத்துக்கான மானியத்தை உயர்த்தியுள்ளதால்,  உரங்களைப் பழைய விலைக்கே விற்க வேண்டும் என வேளாண்துறை உத்தரவிட்டுள்ளது.

உரங்கள் விற்பனை (Sale of fertilizers)

திருப்பூர் மாவட்டத்தில், விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் உரங்கள், தனியார் விற்பனை நிலையம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விற்கப்படுகிறது.

மூலப்பொருள் விலை அதிகரிப்பு (Increase in raw material prices)

இந்திய ரூபாய்க்கு எதிரான, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்த நிலையில், உரம் உற்பத்திக்கான மூலப்பொருள் விலை உயர்ந்துள்ளது.

ரூ.700 வரை உயர்வு (Up to Rs.700)

இதன் அடிப்படையில் தமிழகத்தில், டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உரங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, டி.ஏ.பி., உரம் விலை, 50 கிலோ மூட்டைக்கு, ரூ.700 வரை உயர்ந்துள்ளது.

விவசாயிகள் கோரிக்கை (Farmers demand)

ஆனால் இந்த விலை உயர்வைத் திரும்பப் பெறுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கொரோனாவால் பெரும் நிதிச்சுமையைச் சந்தித்துள்ள நிலையில், உரம் விலை உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் வலியுறுத்தியிருந்தனர்.

மத்திய அரசு நடவடிக்கை (Federal Government action)

இதன் அடிப்படையில் விவசாயிகளுக்குக் கூடுதல் சுமை ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும், விவசாயிகளுக்குப் பழைய விலையிலேயே உரம் கிடைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

அரசு மானியம் உயர்த்தப்பட்டுள்ளதால், 50 கிலோ டி.ஏ.பி., உரம், 1,200 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டும்.

குற்றம் (Crime)

உர மூட்டையின் மீது உள்ள விலையைத் திருத்தம் செய்தல், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, தரமற்ற உரங்களை விற்பது போன்றவைக் குற்றமாகும்.

இதனை மீறினால், உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985- ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்த நிலையில் உரம் உற்பத்திக்கான மூலப்பொருள் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!

நீர்வளத் திட்டங்கள் குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆய்வு!

மண் இல்லாமல் தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த இஞ்சினியர்!

English Summary: Fertilizer subsidy hike - sale at old prices! Published on: 28 May 2021, 06:22 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.