பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 28 January, 2022 12:46 PM IST

பருத்தி மீதான 10 சதவீத இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்தியப் பஞ்சாலைகள் சங்கமான சைமா வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சைமா அமைப்பின் தலைவர் அஷ்வின் சந்திரன், மத்திய நிதியமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

10.50 கோடி வேலை (10.50 crore work)

இந்திய ஜவுளித் துறையானது பருத்தி சார்ந்ததாக அமைந்துள்ளது. சுமார் 65 லட்சம் பருத்தி விவசாயிகள் உள்ளிட்ட 10.50 கோடி பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்கும் துறையாக உள்ளது.

பருத்தியின் பங்களிப்பு (Contribution of cotton)

இந்திய ஜவுளி உற்பத்தியில் பருத்தியின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது. இதேபோல், உலக பருத்தி உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது.

ஜவுளித்துறையின் சவால் (The challenge of the textile industry)

அதேநேரத்தில், உள்நாட்டில் நீண்ட இழை பருத்தி, போதுமான அளவில் கிடைக்காததாலும், குப்பை, தூசி கலந்த மாசு நிறைந்த பருத்தி கிடைப்பதும் ஜவுளித் துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

மாசு நிறைந்த பருத்தி (Contaminated cotton)

உலகில் மாசு நிறைந்த முதல் 10 பருத்தி உற்பத்தியாளர்களில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

இறக்குமதி பருத்தி (Imported cotton)

  • இதனால் இங்குள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள், இறக்குமதி செய்யப்பட்ட நீண்ட இழை பருத்தியையும், மாசில்லாத பருத்தியையும் நம்பி இருக்கின்றனர்.

  • இருப்பினும் இந்தியாவின் ஓராண்டுக்கான மொத்த பருத்தி தேவையில் வெறும் 4 சதவீதமே இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

  • இந்தியாவில் தரமான பருத்தியை உற்பத்தி செய்வதற்காக ஜவுளித் துறையும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

10 % இறக்குமதி வரி (10% import tax)

இருப்பினும் அது ஜவுளித் துறையின் தேவையைப் பூர்த்தி செய்வதாக இல்லை. இந்நிலையில் மத்திய அரசின் கடந்த 2021 2022ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பருத்திக்கு 5 சதவீத இறக்குமதி வரியும், 5 சதவீத வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி என மொத்தம் 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டியைப் பாதிக்கும் (Affecting GST)

  • 10 சதவீத வரி விதிப்பினால் அரசுக்கு சுமார் ரூ.360 கோடி வரையே கூடுதலாக வருவாய் கிடைக்கும்.

  • ஆனால் அதேநேரம் கூடுதல் வரி விதிப்பானது சுமார் ரூ.1,800 கோடி வரையிலான ஜிஎஸ்டி வருவாயை பாதிக்கக் கூடும்.

நன்மையும் இல்லை (There is no benefit)

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவில் உற்பத்தியாகாத, சந்தையில் கிடைக்காத ரக பருத்தியே இறக்குமதி செய்யப்படுகிறது என்பதால் இந்த வரி விதிப்பினால் இந்திய பருத்தி விவசாயிகளுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

வாய்ப்பு அளிக்க வேண்டும் (To be given the opportunity)

எனவே, மத்திய அரசு இந்த விஷயங்களைக் கவனமாக பரிசீலித்து, பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருக்கும் 10 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும். இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் சர்வதேச சந்தையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தேனியில் உரிய பருவத்தில் பாசன நீர்! உணவு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு

மண் மாதிரியை பரிசோதித்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு வேளாண் இயக்குநர் வேண்டுகோள்!

English Summary: Import duty on cotton should be abolished- Farmers insist!
Published on: 16 June 2021, 10:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now