1. விவசாய தகவல்கள்

தஞ்சையில் பருத்தி ஏலம் அடுத்த வாரம் தொடக்கம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Cotton auction in Tanjore starts next week!
Credit : Dailythanthi

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், திருப்பனந்தாள், பாபநாசம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் பருத்தி மறைமுக ஏலம் ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்கப்படவுள்ளது.

இது குறித்து ஆட்சியர் ம.கோவிந்த ராவ் கூறுகையில்,

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ், கும்பகோணம், திருப்பனந்தாள், பாபநாசம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இயங்கி வருகின்றன.

ஜூன் 3-வது வாரம் (3rd week of June)

இவற்றில் நடப்பாண்டுப் பருத்தி மறைமுக ஏலம் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கப் படவுள்ளது.

ஏலத்தின் போது பருத்தி கொள்முதல் செய்ய இந்தியப் பருத்திக் கழகத்தினர், உள்ளூர், வெளியூர் வணிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

பருத்தி விற்பனை (Sale of cotton)

எனவே, பருத்தி விவசாயிகள் தங்கள் விளை பொருளைத் தங்களது பகுதிக்கு அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்குக் காலை 9 மணியளவில் கொண்டு சென்று கொள்முதல் நடைபெறும் நாள்களில் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு விற்பனை செய்து பயன்பெறலாம்.

மறைமுக ஏலம் (Indirect auction)

கொள்முதல் நடைபெறும் நாள்களில் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு விற்பனை செய்து பயன்பெறலாம்.

பகல் 11 மணிக்கு ஏலம் (Auction at 11 p.m.)

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களான கும்பகோணத்தில் புதன்கிழமையும், திருப்பனந்தாளில் வியாழக்கிழமையும், பாப நாசத்தில் வெள்ளிக்கிழமையும் பகல் 11 மணியளவில் ஏலம் நடைபெறும்.

தரம் பராமரிப்பு (Quality maintenance)

அதிகபட்ச விலைக் கிடைக்க தங்களது பருத்தியை நன்கு நிழலில் உலர வைத்து, அதிலுள்ள தூசி போன்ற பொருள்களை நீக்கி, தரமான பருத்தியை விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும்.

எனவே விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி, நல்ல விலை பெற்று பயன்பெறுமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு (Contact)

கூடுதல் விவரங்களுக்கு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடப் பொறுப்பாளர்களை 0435 - 2481285 (கும்பகோணம்), 0435 - 2456447 (திருப்பனந்தாள்), 04374 - 222423 (பாபநாசம்) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

3 விதமான சலுகைகளில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தலாம்!அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

புதுப்பொலிவுடன் காட்சி தரும் மேட்டூர் அணை! நாளை தண்ணீர் திறப்பு!

கோவைக்காய் பயிரிட சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

English Summary: Cotton auction in Tanjore starts next week! Published on: 17 June 2021, 06:59 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.