விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல்!
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலையில் சிறு, குறு விவசாயிகள் வாங்கி பயன்பெறும் வகையில் பாரம்பரிய விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஆனைமலை வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனைமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் பாரம்பரிய நெல் வகைகள் 200 கிலோ இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில் கருப்பு கவுனி 60 கிலோ மற்றும் சீரக சம்பா 140 கிலோ விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் 25 ரூபாய்க்கு விற்கப்படும் பாரம்பரிய விதை நெல் அரசு மானிய விலையில் 12 ரூபாய் 50 காசுகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு 10 கிலோ வரை மானிய விலையில் நெல் விதைகள் வழங்கப்பட இருக்கிறது. இதனை சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
தமிழகத்தில் “பசுமை தமிழகம்” திட்டம் தொடங்கி வைத்தார் மு.க. ஸ்டாலின்!
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் ”பசுமை தமிழகம்” இயக்கம் சார்பாக மரக்கன்று நடும் திட்டத்தினைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தின் வனப்பரப்பை 33%-ஆக உயர்த்திட இந்த மரக்கன்று நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விழாவிற்கு வருகை தந்த விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுவினர், தொண்டர்கள் என அனைவரும் அமரும் இருக்கைகள், வாகன நிறுத்துமிடங்கள், ஒரே நேரத்தில் 500 மரக்கங்றுகள் நடுவதற்கான ஏறபடுகள், பசுமை இயக்கம் குறித்தான விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகள் முதலானவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக வனத்துறை அமைச்சர் கா. ராமசந்திரன், சுற்றுச்சூழல்-காலநிலை மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, வனத்துறை கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் திரு. சையத் முஜம்மில் அப்பாஸ் முதலானோர் கலந்துகொண்டனர்.
கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை: ஆட்சியர் அறிவிப்பு!
கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளதாகக் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் அறிவித்துள்ளார். மத்திய அரசின் தேசிய கைத்தறி வளா்ச்சித் திட்ட வழிகாட்டுதல்படிக் கைத்தறி நெசவாளா், கைத்தறி நெசவு சாா்ந்த உபதொழில்களில் ஈடுபடும் நெசவாளா்களின் குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது உதவித் தொகை பெறும் துணிநூல் கல்வி நிறுவனங்களில் டெக்ஸ்டைல்ஸ் தொடா்பான பட்டய படிப்புகள், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட இருக்கிறது. எனவே, தகுதி உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
PM Kisan: விவசாயிகளுக்கு ரூ. 2000 வரும் தேதி அறிவிப்பு: வெளியானது புதிய தகவல்!
பிஎம் கிசான் என்றழைக்கப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் 12வது தவணைக்காக நிறையப் பேர் காத்திருக்கும் நிலையில் ஒரு புதிய தகவல் வந்துள்ளது. 12ஆவது தவணைப் பணம் 2000 ரூபாய் இந்த மாதமே வங்கிக் கணக்கில் வரவிருக்கிறது. மத்திய அரசிடமிருந்து 12வது தவணை பணம் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே, விவசாயிகள் தங்களது பேமெண்ட் ஸ்டேட்டஸ்-ஐச் சரிபார்த்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கேரளாவின் பாரம்பரிய விவசாயிகள் கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை!
கேரள மாநிலத்தின் பாரம்பரிய விவசாயிகள் மற்றும் விதை சேமிப்பாளர்களான, பாலக்காட்டைச் சேர்ந்த ரெஜி ஜோசப், வயனாட்டினைச் சேர்ந்த ஷாஜி கேதாரம், கண்ணூரைச் சேர்ந்த கே.பி.ஆர். கண்ணன், காசர்கோட்டைச் சேர்ந்த சத்தியநாராயணன் பெளேரி முதலியோர் கிரிஷி ஜாக்ரனுக்கு வருகை தந்தனர். ஒவ்வொரு விவசாயிகளும் தங்கள் விவசாயம் குறித்த செயல்பாடுகளை கிரிஷி ஜாக்ரன் குழுவினரிடையே பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் கிரிஷி ஜாக்ரனின் நிறுவனரும், தலைமை ஆசிரியருமான எம்.சி. டாம்னிக், இயக்குநர் சைனி டாம்னிக் மற்றும் கிரிஷி ஜாக்ரன் குழுவினர் பங்குபெற்றனர்.
மேலும் படிக்க
PM Kisan: ரூ. 2000 பற்றித் தெரிந்துகொள்ள இந்த நம்பரை அழையுங்க!