மத்திய அரசின் 'இ-நாம்' (eNAM) திட்டம் செயல்படுத்தப்படும் தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டிக்கு நெல் வரத்து கடந்தாண்டைவிட 2,000 குவிண்டால் அதிகரித்துள்ளது. புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கடந்த 2018, மார்ச் மாதம், மத்திய அரசின் 'இ-நாம்' என்ற திட்டம் துவங்கப்பட்டது. மார்க்கெட் கமிட்டிக்கு விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களை, 'இ-லாட்' முறையில் உத்தேச மதிப்பில் இ-நாம் போர்ட்டலில் பதிவிடப்படுகிறது.
காலை 10:30 மணிக்குள் வியாபாரிகள், இ-நாம் போர்ட்டலில் ஆன்லைன் மூலம் நெல் உள்ளிட்ட விளைபொருட்களுக்கான விலையை நிர்ணயிக்கின்றனர். அதிகபட்ச விலை நிர்ணயிக்கும், வியாபாரிக்கு விளை பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதுஎலக்ட்ரானிக் மிஷின் மூலம் எடை போடப்படுவதால், ஒரு மூட்டைக்கு 3 முதல் 5 கிலோ வரையிலான இழப்பு தவிர்க்கப்படுகிறது. சரியான எடை, சில நாட்களிலேயே பணமும் கிடைத்து விடுகிறது.மேலும், மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதல் விலை கிடைக்கிறது.
நெல் வரத்து அதிகரிப்பு (Increase in Paddy Supply)
புதுச்சேரி மட்டும் இன்றி சுற்றியுள்ள தமிழக பகுதிகளான மரக்காணம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதி விவசாயிகளும் தட்டாஞ்சாவடி கமிட்டிக்கு விளைபொருட்களை கொண்டுவர ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் சம்பா பட்ட நெல் அறுவடை துவங்கியது முதல், தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டிக்கு வெள்ளை பொன்னி, பி.பி.டி.பபட்லா மற்றும் பொன்மணி ரக நெல் வரத்து உள்ளது. கடந்தாண்டு சம்பா பட்டத்தில் தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டிக்கு மொத்தம் 6,100 குவிண்டால் நெல் வந்தது. இந்தாண்டு, நேற்று வரை மொத்தம் 8,171 குவிண்டால் நெல் வந்துள்ளது.
சம்பா பட்ட அறுவடை (Samba Harvest)
சம்பா பட்ட அறுவடை பணி வரும் மார்ச் 15 முதல் 20ம் தேதி வரை நடைபெறும். இதனால், கமிட்டிக்கு 10 ஆயிரம் குவிண்டால் அளவிற்கு நெல் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச விலைநடப்பு சீசனில் இதுவரை அதிகபட்சமாக வெள்ளை பொன்னி குவிண்டால் ரூ.2,106க்கும், பபட்லா ரூ.1,921க்கும், பொன்மணி ரூ.1,66க்கு விலை போனது.
மேலும் படிக்க
இயற்கை விவசாயத்தில் நஞ்சில்லாப் பழங்களை சாகுபடி செய்யும் மதுரை விவசாயி!
இதைத் தெரிந்து கொண்டால் காய்கறித் தோல்களை இனி வீசியெறிய மாட்டீர்கள்!