இந்தியாவை மையமாகக் கொண்டு மின் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனம் செலஸ்டியல் இ-மொபிலிட்டி (Cellestial E-Mobility). இந்நிறுவனம் இ-ட்ராக்டர்களை இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. அதாவது, எலெக்ட்ரிக் ட்ராக்டர்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. நாட்டில் விற்பனைக்கு வந்த முதல் மின்சார டிராக்டர் இதுவே ஆகும். இந்த டிராக்டரையே நிறுவனம் தற்போது வெளிநாடு ஒன்றில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டு சந்தையிலேயே இ-டிராக்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்நாட்டைச் சேர்ந்த குருபோ மார்வெல்ஸா (Grupo Marvelsa) எனும் நிறுவனத்துடன் செலஸ்டியல் இ-மொபிலிட்டி கூட்டு சேர்ந்திருக்கின்றது.
இ-டிராக்டர் விற்பனை (E-Tractor Sales)
இந்நிறுவனத்திற்கு சொந்தமாக 2,500-க்கும் அதிகமான விற்பனையகங்கள் மெக்சிகோவில் செயல்பட்டு வருகின்றன. இத்துடன், 800 அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதுதவிர, 35க்கும் அதிகமான எண்ணிக்கையிலான வாகனங்களை நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது. செலஸ்டியல் இ-மொபிலிட்டி நிறுவனமானது விவசாயம், விமான நிலையம் மற்றும் கூட்ஸ் கேரியர் ஆகிய பிரிவுகளுக்கு பயன்படக் கூடிய வாகனங்களை பிரத்யேகமாக தயாரித்து வருகின்றது. மின்சாரத்தால் இயங்கக் கூடிய வாகனங்களை மட்டுமே இந்த பிரிவுகளுக்கு ஏற்ப நிறுவனம் உற்பத்தி செய்து வழங்கி வருகின்றது.
அந்தவகையில் விவசாய பணிகளுக்கு பயன்படும் வகையில் நிறுவனம் உருவாக்கியதே இ-டிராக்டர். இதனை நிறுவனம் 2020 மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. அறிமுகத்தில் இருந்து தற்போது வரை சுமார் 1,800 யூனிட்டுகளுக்கான புக்கிங் கிடைத்திருக்கின்றது.
செலஸ்டியல் நிறுவனத்தின் இ-டிராக்டர் மூன்று விதமான மாடல்களில் விற்பனைக்குக் கிடக்கின்றது. 27 எச்பி, 35 எச்பி மற்றும் 55 எச்பி ஆகிய தேர்வுகளிலேயே அந்த டிராக்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்டவைகளாக காட்சியளிக்கின்றன.
பேட்டரி திறன் (Battery Capacity)
அந்தவகையில், 27 எச்பி அதிகபட்சமாக 13.5 Kw பவரை வெளியேற்றக் கூடியதாக காட்சியளிக்கின்றது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 20 கிமீ ஆகும். மேலும், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த டிராக்டரில் 150 Ah திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
நிலத்திற்கு லேசர் லெவலிங்: மகசூலை அதிகரிக்கும் அருமையான வழி!