1. விவசாய தகவல்கள்

நிலத்திற்கு லேசர் லெவலிங்: மகசூலை அதிகரிக்கும் அருமையான வழி!

R. Balakrishnan
R. Balakrishnan
Laser Leveling

மேடு பள்ளமான நிலத்தில் தண்ணீர் பாய்ச்சினால் பள்ளமான இடத்தில் பயிர் அழுகும். மேடான இடத்தில் நிலம் காய்ந்து களை அதிகரிக்கும். 'லேசர் லெவலிங்' (Laser Leveling) கருவி மூலம் நிலத்தை சீராக சமப்படுத்தினால் மகசூல் அதிகரிக்கும் என்கிறார் மதுரை குலமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ராமசுப்ரமணியன். நிலத்தை சமப்படுத்தியதன் பலன் குறித்து ராமசுப்ரமணியன் கூறியதாவது:
முதலில் கோடை உழவு செய்த பின் லேசர் லெவலிங் கருவி கொண்டு ஒரு ஏக்கரை சமன்செய்ய 2 மணி நேரமானது. ஒருமணி நேரத்திற்கு ரூ.1200 கட்டணம் வாங்கினர். 4 ஏக்கரையும் சமப்படுத்திய பின் இயந்திர நடவு மூலம் கோ 51 நெல் ரகத்தின் 14 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நட்டேன். இது 110நாள் ரகம். இன்னும் பத்து நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்.

நல்ல மகசூல் (Good Yield)

தண்ணீர் பாய்ச்சும் போது நிலம் முழுக்க சமமாக பாய்வதால் களை கட்டுப்படுத்த முடியும். தண்ணீர் தேவை குறைவு. சூரிய ஒளி, காற்று, மண்ணிலிருந்து கிரகிக்கப்படும் சத்து அனைத்து பயிர்களுக்கு சமமாக கிடைக்கிறது. எலியினால் ஏற்படும் பயிர் சேதம் இல்லை. நோய் தாக்குதல், பூச்சி தாக்குதலால் ஏற்படும் பாதிப்பு குறைவு. மழை வெள்ளத்தால் பயிர் சாயாது. பயிர் நன்கு தூர் கட்டி நல்ல மகசூல் கிடைக்கும். அறுவடை செலவு குறைந்து மகசூல் அதிகம் (ஏக்கருக்கு 45 - 50 மூடை) கிடைக்கும் என்றார்.

இத்தொழில்நுட்பம் குறித்து மேற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வளர்மதி கூறியதாவது: ஆத்மா திட்டத்தின் கீழ் குலமங்கலத்தில் உள்ள ராமசுப்ரமணியன் வயலில் பண்ணைப் பள்ளி நடத்தப்பட்டு 25 விவசாயிகள் பங்கேற்றனர். விதைப்பது முதல் அறுவடை வரை 6 கட்டங்களாக பயிற்சி நடைபெற்றது.

மண்மாதிரி (Soil Sample)

நிலத்தை சீர்படுத்துவது, மண்மாதிரி எடுத்து உரமிடுவது, பசுந்தாள் பயிரிட்டு மடக்கி உழுவது, நெல் உயிர் உர விதைநேர்த்தி, பூசண கொல்லி விதைநேர்த்தி, திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பம், வரப்பில் உளுந்து பயறு விதைத்தல் போன்ற அனைத்து தொழில்நுட்பங்களையும் கடைப்பிடித்துள்ளார். வேளாண் பொறியியல் துறை மற்றும் முன்னோடி விவசாயிகளிடம் இந்த கருவி வாடகைக்கு உள்ளது என்றார்.

தொடர்புக்கு - 95850 95748

மேலும் படிக்க

ஒருங்கிணைந்த பண்ணையம்: முதல் முயற்சியே வெற்றி கண்ட இயற்கை விவசாய தம்பதி!

தென்னீரா பானம் பொருளாதார புரட்சி ஏற்படுத்தும்: உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நம்பிக்கை!

English Summary: Laser Leveling to the Land: A Fantastic Way to Increase Yield! Published on: 05 February 2022, 04:31 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.