பெண்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையிலும், உயர்கல்விக்கு உதவி செய்யும் நோக்கிலும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடந்த நிகழ்வில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில் பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரியில், புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் 1 லட்சத்து 04 ஆயிரம் 347 ஏழு மாணவிகள் பயன்பெறுவார்கள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
2.விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.3,000- முதலமைச்சர் மூ.க.ஸ்டாலின் அறிவிப்பு!
காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்தது. இதனைக் கருத்தில்கொண்டு, நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயிறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்தது. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் நெற்பயிர்களில் ஈரப்பதம் அதிகமாகி விட்டது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஹெக்டருக்கு ரூ.3000 வீதம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
3.TNAU 133 பயிர்களுக்கான நடைமுறைகளின் தொகுப்பை டிஜிட்டல் மயமாக்க வேகூல் உடன் ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் உள்ள விவசாய சமூகத்தை மேம்படுத்துவதற்கும், WayCool இன் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், TNAU அதன் தற்போதைய PoPகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், உத்திசார் ஒத்துழைப்பு மூலம் விவசாயிகளுக்கு பயனளிக்கும். வேகூலின் உழவர் ஈடுபாட்டுப் பிரிவான Outgrow மூலம் PoPகள் மொபைல் பயன்பாடுகள் மூலம் விவசாயிகளுக்குக் கிடைக்கும். இந்த ஒத்துழைப்பு TNAU ஆசிரிய உறுப்பினர்களுக்கு விவசாயிகளைப் பயிற்றுவிப்பதற்கும், அவுட்க்ரோ வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் (OARS) இயற்கை வேளாண்மை ஆராய்ச்சிக்கான திறந்த மைதானத்தையும் வழங்கும். மேலும், WayCool ஆனது பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேரடி திட்டங்களில் பங்கேற்கவும், வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை எளிதாக்கவும், OARS வசதிக்கான களப்பயணங்களை ஏற்பாடு செய்யவும் வாய்ப்புகளை வழங்கும், இவை அனைத்தும் தொழில் முனைவோர் நோக்கிய அவர்களின் பயணத்திற்கு உதவும்.
மேலும் படிக்க: இறால் வளர்ப்பிற்காக 40% மானியமாக 2.40 லட்சம் வழங்கப்படும்! உடனே விண்ணப்பிக்கவும்
4.கதிர் நிலையில் உள்ள நெற்பயிர்களுக்கு மற்றும் சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கும் பணி காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் பாசனப் பரப்புகளில் கதிர் நிலையில் உள்ள நெற்பயிர்களுக்கு பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி 28 முடிய சம்பா சாகுபடிக்காக, காலநீட்டிப்பு செய்து, தகுந்த இடைவெளிவிட்டு 691.20 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி பிரதானக் கால்வாய் பாசனப் பரப்புகளில் கதிர் நிலையில் உள்ள நெற்பயிர்களுக்கு பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி 28 முடிய சம்பா சாகுபடிக்காக, கால நீட்டிப்பு செய்து, தகுந்த இடைவெளிவிட்டு 532.22 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், அமராவதி ஆற்றின் மதகு வழியாக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 47,177 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
5.முள்ளங்கி விவசாயிகள் கண்ணீர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முள்ளங்கி அறுவடை செய்தபின்னர் இடைத்தரகர்கள் 1 ரூபாய்க்கு விலை கேட்டனர். பல விவசாயிகள் இந்த விலைக்கு இடைத்தரகர்களிடம் விற்று பெரும் நஷ்டமடைந்துள்ளனர். பல விவசாயிகள் அறுவடை செய்யாமல் பயிரை அப்படியே விட்டு விட்டனர். இதை அறிந்த சில வியாபாரிகள் விவசாயிகளிடம் முள்ளங்கியை நேரடி கொள்முதல் செய்து சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனர். கோயம்பேடு சந்தைக்கு கொண்டுவரப்பட்ட, 30 கிலோ கொண்ட முள்ளங்கி மூடை ஒன்றிற்கு 200 ருபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த கணக்கில் ஒரு கிலோ முள்ளங்கி 7 ரூபாய் ஆகின்றது. இது சில்லறை கடைகளில் கிலோ ரூ.40 முதல் ரூ.50 க்கும் விற்கப்படுகிறது. நீலகிரியில் ஒரு கிலோ ரூ.78 க்கு விலை விற்கப்படுகிறது. அனைவரும் லாபமிட்டி வரும் நிலையில் விவசாயிகள் லாபமடையாததற்கு காரணம் மாவட்ட வேளாண்மை அதிகாரிகள் சந்தைப்படுதல் குறித்து விவசாயிகளுக்கு வழிகாட்டாததே என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் படிக்க: கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் தகவல்
6.TAHDCO வழங்கும் பயிற்சி, 100% வேலைவாய்ப்பு உறுதி!
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பயிற்சியினை பெற 18 முதல் 25 வயது வரை உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களும், பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு மூன்றுமாதம், விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவு தொகை ரூ.20,000த்தை தாட்க்கோ வழங்கும். இப்பயியற்ச்சியினை பெற்றவர்களுக்கு 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க படும் என்று தெரிவிக்க பட்டுள்ளது,. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tahdco.com/ திரையில் தோன்றும் இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
7.விழுப்புரம் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க வேளாண் மண்டல அலுவலர் அறிவுரை
விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட வேளாண் மண்டல அலுவலர் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க அறிவுரை வழங்கினார். திருச்சி மண்டல விதைப்பரிசோதனை அலுவலர் அறிவழகன், விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதைப்பரிசோதனை நிலையத்திற்கு வரப்பெறும் விதை மாதிரிகளில் விதைகளின் முளைப்புத்திறன் சோதனை, ஈரப்பத சோதனை, புறத்தூய்மை சோதனை, பிற ரக கலப்பு விதைகளை கண்டறியும் சோதனை முறைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது பற்றி ஆய்வு செய்தார். விதை மாதிரிகளை சீரிய முறையில் பகுப்பாய்வு செய்து தரமான விதைகளையே, விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மண்டல விதைப்பரிசோதனை அலுவலர் அறிவழகன் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் சந்தோஷ்குமார், கீதா ஆகியோர் உடனிருந்தனர்.
8.தமிழகத்தில் ஆவின் நெய்,வெண்ணை தட்டுப்பாடு
தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஆவின் நிறை கொழுப்பு பால் 12 ருபாய் விலையேற்ற பட்டிருந்த போதிலும் கொள்முதல் விலை உயர்வால் உற்பத்தி செலவில் 2 ருபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஆவின் நெய், வெண்ணை, தயாரிப்பு குறைந்துள்ளது.உற்பத்தியாகும் நெய், வெண்ணை ஆகியவற்றை மொத்த வியாபாரிகள் வாங்கி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், சூப்பர் மார்கெட்களுக்கு விற்று வருகின்றனர், இதனால் ஆவின் பாலகங்களில் நெய், வெண்ணை, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் ரூ.2000 குறித்து முக்கிய அப்டேட்!
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்