1. செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் ரூ.2000 குறித்து முக்கிய அப்டேட்!

Deiva Bindhiya
Deiva Bindhiya
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் ரூ.2000 குறித்து முக்கிய அப்டேட்!
Important update on Rs.2000 for disabled people from chennai!

சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலகத்தின்‌ முலம்‌ மாதாந்திர பராமரிப்புதவித் தொகை ரூ.2000/- பெறும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ அனைவரும்‌, ஆதார்‌ அட்டை இணைக்க வேண்டியது அவசியம்‌ ஆகும்‌. அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலகத்தின்‌ முலம்‌ ரூ.2000/ மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை மனவளர்ச்சி குன்றியோர்‌ (ID) தசைசிதைவு நோயால்‌ திக்கப்பட்டோர்‌ (MuD), கடுமையாக பாதிக்கப்பட்டோர்‌ (SD), தொழுநோயால்‌ பாதிக்கப்பட்டோர்‌ (LC) மற்றும்‌ முதுகு தண்டுவடத்தால்‌ பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ அனைவரும்‌ ஆதார்‌ அட்டையினை. அரசிற்கு சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட இவ்வலுவலகத்தின்‌ முலம்‌ மேற்கண்ட பராமரிப்பு ௨தவித்தொகை பெறும்‌ பயனாளிகளில்‌ இது வரை ஆதார்‌ அட்டை விவரங்களை சமர்ப்பிக்காத அனைத்து மாற்றுத் திறனாளிகளும்‌, 10.02.2023க்குள்‌ தங்களின்‌ ஆவணங்களான மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை, ஆதார்‌ அட்டை, வங்கிக்கணக்கு எண்‌, UDID அட்டை, மருத்துவச்‌ சான்று, மற்றும்‌ மாற்றுத்திறனாளி நபரின்‌ புகைப்படம்‌ -1) ஆகிய நகல்களுடன்‌ கீழ்கண்ட சிறப்பு பள்ளிகளில்‌ வழங்கிடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌, திருமதி.சு.அமிர்தஜோதி, அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

உதவித்தொகை பெற்றுவரும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ மேற்குறிப்பிட்ட விவரங்களையும்‌ கீழ்காணும்‌ மண்டலங்களில்‌ உள்ள குறிப்பிட்ட சிறப்புப்‌ பள்ளிகளில்‌ வழங்கிடுமாறு கோரப்படுகிறது.

1. திருவொற்றியூர்‌, மண்டலத்தில்‌ வார்டு எண்‌. 1 முதல்‌ 14 வரை அன்பாலயா சிறப்புப்பள்ளி எண்‌.67/4/6, கிராமம்‌ தெரு, திருவொற்றியூ, சென்னை -19 தொலைபேசி எண்‌. 8939674767

2. மணலி, மண்டலத்தில்‌ வார்டு எண்‌.15 முதல்‌ 21 வரை ஆப்பர்சூனிட்டி சிறப்புப்பள்ளி, எண்‌.18/3, புதிய காலனி பிரதான தெரு, பழைய நாப்பாளையம்‌, மணலி புது நகார்‌, சென்னை 193, தொலைபேசி எண்‌. 9447857285

3. மாதவரம்‌, மண்டலத்தில்‌ வார்டு எண்‌. 22 முதல்‌ 33 வரை மைத்ரி சிறப்புப்பள்ளி, எண்‌.98, கிருஷ்ணதாஸ்‌ ரோடூ. மங்களாபுரம்‌, பெரம்பூர்‌, சென்னை- 12, தொலைபேசி எண்‌. 9080183069

4. தண்டையார்பேட்டை, மண்டலத்தில்‌ வார்டு எண்‌.34 முதல்‌ 48 வரை அன்வைகாப்பகம்‌ சிறப்புப்பள்ளி, எண்‌.77/, திருவொற்றியூர்‌ நெடுஞ்சாலை, சென்னை-81, தொலைபேசி எண்‌. 7395949500

5. இராயபுரம்‌, மண்டலத்தில்‌ வார்டு எண்‌.49 முதல்‌ 63 வரை ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப்‌ தமிழ்நாடு, எண்‌.34, வீராகுட்டி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை -21, தொலைபேசிஎண்‌.8778684301

6. திரு.வி.க. நகர்‌,மண்டலத்தில்‌ வார்டு எண்‌.64 முதல்‌ 78 வரை சி.எஸ்‌.ஐ.புத்துயிர்‌ மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப்பள்ளி, எண்‌.64, ராகவன் தெரு, பெரம்பூர்‌, சென்னை- 11. தொலைபேசி எண்‌. 9962625019

7. அம்பத்தூர் மண்டலத்தில்‌ வார்டு எண்‌. 79 முதல்‌ 93 வரை வசந்தம்‌ சிறப்புப்‌ பள்ளி, கிழக்குமுகப்போ, (EB ஆபிஸ்‌ அருகில்‌) சென்னை- 37. தொலைபேசி எண்‌. 044-26560662

8. அண்ணாநகர்‌, மண்டலத்தில்‌ வாரடு எண்‌.94 முதல்‌ 108 வரை விஸ்டம்‌ லேனிங்‌ சென்டர்‌, புதிய எண்‌.195, 6 வது அவென்யூ அண்ணா நகர்‌ மேற்கு, சென்னை-40, தொலைபேசி எண்‌. 9626160647

9. தேனாம்பேட்டை மண்டலத்தில்‌ வார்டு எண்‌.109 முதல்‌ 126 வரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலகம்‌, டி.எம்‌.எஸ்‌.வளாகம்‌, தேனாம்பேட்டை, சென்னை- 6, தொலைபேசி எண்‌ 044- 24714758.

10. கோடம்பாக்கம்‌ மண்டலத்தில்‌ வார்டு எண்‌.127 முதல்‌ 142 வரை மாநில வள பயிற்சி மையம்‌, Peripheral Hospital Campus, Near ESI, கே.கே.நகர், சென்னை -78, தொலைபேசி எண்‌.18004250111, 8838570202

11. வளசரவாக்கம்‌, மண்டலத்தில்‌ வார்டு எண்‌.143 முதல்‌ 155 வரை விஜய்‌ ஷீயூமன்‌ சாவீஸ்‌, எம்‌.ஜி.ஆர்‌. ஜானகி மெட்ரிகுலேஷன்‌ பள்ளி, சத்தியாகார்டன்‌, பி.வி.ராஜாமன்னார்சாலை, கே.கே.நகா், சென்னை -78, தொலைபேசிஎண்‌. 18004250111, 7358583809

12. ஆலந்தூர்‌ மண்டலத்தில்‌ வார்டு எண்‌.156 முதல்‌ 167 வரை மாநில வளபயிற்சிமையம்‌, Peripheral Hospital Campus, Near ESI, கே.கே.நகா், சென்னை- 78, தொலைபேசி எண்‌. 18004250111, 7358583809

13. அடையார்‌, மண்டலத்தில்‌ வார்டு எண்‌.170 முதல்‌ 182 வரை செயின்ட்‌ லூயிஸ்‌ காதுகேளாதோர்‌ மற்றும்‌ பார்வை திறன்‌ குறைபாடுடையோர்‌ சிறப்புப்பள்ளி கெனால்‌ பேங்க்‌ ரோடு, பழைய கேன்சர்‌ மருத்துவமனை அருகில்‌ காந்திநகர்‌, அடையார்‌, சென்னை -20, தொலைபேசி எண்‌. 9444851437

14. பெருங்குடி, மண்டலத்தில்‌ வார்டு எண்‌. 168, 169, 183-191 வரை ஸ்பாஸ்டிக்‌ சொசைட்டி ஆப்‌ தமிழ்நாடு, கரமணிசாலை, சென்னை- 113 தொலைபேசி எண்‌. 8122879150

15. சோழிங்கநல்லூர்‌, மண்டலத்தில்‌ வார்டு எண்‌.192 முதல்‌ 200 வரை பாத்வே சிறப்புப்பள்ளி, எண்‌. E76/1, 12-வது மேற்குதெரு, காமராஜாநகர்‌, திருவான்மியூர்‌, சென்னை- 41, தொலைபேசி எண்‌. 9840792687

எனவே, ரூ.2000/-உதவிதொகையினை தொடர்ந்து, பெறும்‌ பொருட்டு மேற்கண்ட இடங்களில்‌ சான்றுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

மேலும் படிக்க:

உஷார் கொழிப்பண்ணையளர்களே: கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் தகவல்

அசத்தலான தினை அவுல் வைத்து சூப்பர் டிபன்!

English Summary: Important update on Rs.2000 for disabled people from chennai! Published on: 03 February 2023, 03:53 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2023 Krishi Jagran Media Group. All Rights Reserved.