இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 10 May, 2023 8:16 AM IST
Insect attack on green chili plant? Do this!

வீட்டுத்தோட்டமாக இருந்தாலும், வெளியில் தனித் தோட்டமாக இருந்தாலும் பச்சை மிளகாய் வளர்ப்பவர்கள் நாற்றாங்கால் தொடங்கி காய்க்கும் பருவம் வரை பூச்சி தாக்குதலிலிருந்து கவனமாய் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே, பூச்சி தாக்குதலிலிருந்து விடுபட சில டிப்ஸ்களை இப்பகுதியில் பார்க்கலாம்.

பச்சை மிளகாய் ஆண்டுக்கு மூன்று பருவங்களில் பயிரிடலாம். ஜனவரி – பிப்ரவரி, ஜூன் – ஜூலை, செப்டம்பர் – அக்டோபர் ஆகிய மாதங்கள் பயிரிடலாம் எனக் கூறப்படுகிறது. மிளகாய் வளருவதற்கு மித வெப்பமான பருவமே ஏற்றது ஆகும். அதாவது அதிக குளிரோ, அதிக வறட்சியோ இதைப் பயிரிட ஏற்றதல்ல. எனவே சூரிய வெப்பம் நிலத்தில் இருந்து அதிக தண்ணீரை உறிஞ்சாத பருவமாக இருந்தால் பச்சை மிளகாய் வளர்ச்சி அபரிமிதமாய் இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

இதன் வளர்பு முறை என்று பார்த்தால் நாற்றங்கால் நிலத்தினை வடிகால் வசதியுள்ள நிழல் இல்லாத பகுதிகளில் மேட்டுப் பாத்தியாக அமைக்க வேண்டும். அதோடு,போதிய அளவு விதையை மட்டும் கலக்கமாக விதைக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப தண்ணீரைப் பாய்ச்சுதல் வேண்டும். விதைகளை விதைப்பதற்கு முன்பு திராம் அல்லது கேப்டான் மருந்துடன் கிலோவிற்கு 4 கிராம் வீதம் மருந்திட்டு விதைக்கலாம். மண்ணிலிருந்து தாக்கும் பூசணங்களையும் சிறிது காலத்திற்கு தடுத்து விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்கலாம்.

 

பூச்சு தாக்குதலிலிருந்து விடுபட டிப்ஸ்:

 

  • மிளகாய் செடியை இலைப்பேன், அசுஉணி, செஞ்சிலந்து ஆகிய மூன்று விதமான பூச்சிகள் தாக்குகின்றன.
  • இவற்றை முறையான மருந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
  • அதேபோன்று காய் பிடித்திருக்கும் பருவத்தில் காய் துளைப்பான் பூச்சிகள் தாக்கும்.
  • இவற்றினை விளக்குப் பொறி வைத்து தாய் பூச்சிகளை அளிக்கலாம். மிளகாய் காய்த்த உடன் அவற்றை பறித்துவிடவேண்டும்.
  • அப்பொழுதுதான் புதிய பச்சை மிளகாய்கள் காய்க்கும்.
  • அதேபோல் மிளகாய் செடிகளுக்கு அருகில் உளுந்து, பாசிப்பயறு செடிகளை பயிரிட்டால் அதன் மூலம் நன்மை தரும் பூச்சிகள் விடுபட்டு விளைச்சல் நன்றாக இருக்கும் என்கின்றனர் வேளாண்மைத்துறை அதிகாரிகள். இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்கள் மிளகாய் உற்பத்தி அதிகரிக்க உதவும்.

மேலும் படிக்க

மண்வளத்தை அதிகரிக்கும் கார்பன் சேமிப்பு-ஆய்வில் தகவல்!

தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பில் சாதனைப் படைக்கும் தமிழகம்!

English Summary: Insect attack on green chili plant? Do this!
Published on: 10 May 2023, 08:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now