கேழ்வரகு ஆண்டுக்கொருமுறை விளையும் தானியப் பயிர் ஆகும். இந்நிலையில் கேழ்வரகு பயிரினை தாக்கும் கதிந்நாவாய் பூச்சி, அசுவினி, வேர் அசுவினி ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வழிமுறைகள் குறித்து அறியலாம்.
கேழ்வரகு ஆண்டுக்கொருமுறை விளையும் தானியப் பயிர் ஆகும். இந்நிலையில் கேழ்வரகு பயிரினை தாக்கும் கதிந்நாவாய் பூச்சி, அசுவினி ஆகியவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்து அறியலாம். கேழ்வரகு எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கர்நாடகவும், தமிழ்நாடும் கேழ்வரகு சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். இதன் வேறு பெயர்கள் ராகி மற்றும் கேப்பையாகும். இந்தியா போன்று ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பானில் பயிர் விளைவிக்கப்படுகிறது.
கதிர்நாவாய் பூச்சி:
பூச்சிகள் பூக்கும் பருவத்திற்கு முன் தோன்றி, பால் பருவம் வரை இருக்கும். பால் பருவத்தில் முதிர் பூச்சிகளும், குஞ்சுகளும் தானியத்தில் உள்ள சாற்றை உறிஞ்சி எடுக்கிறது. இதனால் தானியத்தின் தரம் குறைவதோடு, பாதிக்கப்பட்ட தானியம் உண்ண தகுதியற்ற நிலையையும் அடைகிறது. பூச்சியின் பாதிப்பால் முளைப்புத்திறன் குறைந்து தானியங்களும் பூசணத்தாக்குதலுக்கு உண்டாகின்றன. மேலும் பூச்சித்தாக்கம் தீவிரமடையும் போது கதிர் பதராகிறது.
முட்டை, குஞ்சுகள், பூச்சி என ஒவ்வொரு பரிமாணங்களிலும் கதிரை தாக்குகின்றன. கார்பரில் 50 WP @ 1 கிலோவை 500 லிட்டர் தண்ணீர்/ஹெக்டேர் மருந்தை பால் பருவத்தில் தெளிப்பதன் மூலம் பூச்சி தாக்குதலினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பயிரை காப்பாற்றலாம்.
அசுவினி:
பயிர் தாக்குதலின் அறிகுறிகளாக இலைகள் மஞ்சள் நிறமாக மாறுகின்றன. முதிர் பூச்சிகள் மற்றும் குஞ்சுகளும் பயிரின் இளம் தண்டிலும், இலையின் அடிப்பாகத்திலும் காணப்படும். அசுவினியின் உடம்பிலிருந்து வெளிவரும் தேன் துளி போன்ற கழிவுப்பொருட்கள் இலைகளில் படிவதால் எறும்புகளுக்கு உணவாகிறது. இதனால் கரும்புகை பூசணம் உருவாகவும் வழிவகை செய்கிறது.
இளம் குஞ்சான பூச்சி வட்ட வடிவில் சிகப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் , அசுவினி மஞ்சள் நிறத்தில் அடர் பச்சை நிற கால்களுடன் காணப்படும். பூச்சி தாக்கிய செடியின் கீழ்பகுதியில் டெமட்டான் 25 EC 20 மி.லி பூச்சி மருந்தினை தெளிக்கலாம் அல்லது டைம்தோயேட் 30EC 1.2 லிட்டர் / எக்டர் தெளிப்பதன் மூலம் மகசூல் இழப்பை தவிர்க்கலாம்.
வேர் அசுவினி:
பூச்சிகளால் தாக்கப்பட்ட செடிகள் வெளிறிய மஞ்சள் நிறத்திற்கு மாறி குன்றிவிடும். ஆங்காங்கே செடிகள் திட்டு திட்டாக, வாடி காய்ந்து காணப்படும் மேலும் செடிகளில், புல்களிலும் தேன்துளி, தத்துப்பூச்சி கழிவுப் பொருட்களும், எறும்புகளும் காணப்படும்.
வேர் அசுவினி பூச்சியானது வட்ட வடிவில் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். கார்பரில் 50 WP @ 1 கிலோ/ஹெக்டேர் (500 லிட்டர் கரைசல்/ஹெக்டேர்) தெளிப்பதன் மூலமாகவும் பயிர் பாதிப்பினை கட்டுப்படுத்தலாம்.
மேலும் படிக்க :
அதிக மகசூல் கொடுக்கும் புதிய ரக கருப்பு கவுனி!
இடைத்தரகர்கள் இல்லாமல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வேண்டுமா? இதோ!