1. விவசாய தகவல்கள்

இடைத்தரகர்கள் இல்லாமல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வேண்டுமா? இதோ!

Deiva Bindhiya
Deiva Bindhiya

அரியலூர் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு, அரியலூர் மாவட்ட விவசாயிகள் நெல் அறுவடையில் பல சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.

அறுவடை நேரத்தில் அறுவடைக்கு கூலி ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இம்மாதிரியான வேலை ஆட்கள் தட்டுப்பாட்டை போக்க தமிழக முயற்சித்து வருகிறது. இம்மாதிரியான வேலை ஆட்கள் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசானது ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்கள் மூலம் விளைந்த பயிர்களை அறுவடை செய்யும் போது உரிய நேரத்தில் அறுவடை செய்வது மட்டுமின்றி அறுவடையின் போது ஏற்பட கூடிய மகசூல் இழப்பினை வெகுவாக குறைக்க முடியும்.

அறுவடை இயந்திரங்களுக்காக சில நேரங்களில் விவசாயிகள் இடைத்தரகர்களிடம் தள்ளப்பட்டு தரகு கொடுத்து அறுவடை செலவு அதிகமாவதுடன் மொத்த வருமானமும் குறைகிறது. அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஏற்பாட்டின்படி, இந்த பிரட்சனையை தீர்க்க வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் அறுவடை இயந்திரங்களை நேரடியாக உரிமையாளர்களிடமிருந்து பெற உரிமையாளர் பெயர், விலாசம் கைப்பேசி எண்ணுடன் மாவட்ட வாரியாக, வட்டார வாரியாக உழவன் செயலியின் மூலம் வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு என்ற முகப்பை தேர்வு செய்து அறுவுடை எந்திரங்கள் பற்றி அறிய என்ற துணை முகப்பின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் அதன் தொடர்புடைய வட்டாரத்தை உள்ளீடு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வேளாண் பட்ஜெட்: விவசாயிகள் கருத்து தெரிவிக்க தமிழக அரசு அழைப்பு!

விவசாயிகள் உழவன் செயலிக்குள் சென்று நேரடியாக உரிமையாளரை தொடர்பு கொண்டு இடைத்தரகர் இன்றி நெல் அறுவடை இயந்திரங்களை பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, அவர்கள் தெரிவித்துள்ளார்.

உழவன் செயலி (Uzhavan App)

இதனை விவசாயிகள் மானிய விலையில் பெறுவதற்கு முதலில் உங்களின் Mobile-லில் play store அல்லது App Store-ல் இருந்து உழவன் செயலியை (Uzhavan APP) பதிவிறக்கம் செய்யவேண்டும்.

வேளாண் இயந்திரத்தை தேர்வு செய்தல்

  • பின்னர் அதில் இடுபொருள் முன்பதிவு என்பதை தேர்வு செய்யவேண்டும்.
  • அதன் பின்னர் வகை என்பதின் கீழ் பண்ணை இயந்திரங்கள் (பொறியியல் துறை) என்பதை தேர்வு செய்யுங்கள்.
  • அதன் பின்னர் உழவன் செயலியில் அவரது விண்ணப்பம் பதிவு செய்யப்படும்.
  • பின் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in உடன் இணைக்கப்படும்.
  • பின்னர் உரிய விவரங்களைப் பதிவு செய்தவுடன் அவருக்கு ஒரு அடையாள மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்.

மேலும் படிக்க:

Agri Budget-க்கு முன் விவசாயிகளிடம் ஆலோசனை நடத்த விவசாயகள் கோரிக்கை மற்றும் வேளாண் செய்திகள்

English Summary: Want to rent a harvester without intermediaries? Here it is! Published on: 24 February 2023, 02:39 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.