ஊடுபயிரின் உன்னதம் என்று பார்த்தால், அது தமிழர் வேளாண்மையின் தனி இடம் பிடித்திருந்ததை நம்மால் புரிந்துகொள்ள இயலும்.
பொதுவாக ஊடுபயிரின் தேவை என எடுத்துக்கொண்டால் அதில் 4 அம்சங்கள் அடங்கியுள்ளன.
4 அம்சங்கள் (4 strategy)
அவற்றில் முதன்மையானது, தரிசாக இருக்கும் நிலத்தை உபயோகப் படுத்துவது.
இரண்டாவதாக, இடுபொருட்களான உழைப்பு, உரம், நீர், நிலம், ஆகியவற்றைப் பகிர்ந்து, ஒன்றுக்கும் மேற்பட்ட தாவரங்களுக்கு அளிப்பது.
இதற்கு அடுத்தபடியாக, ஒன்றுக்கும் மேற்பட்ட தாவரங்கள் மூலம், ஒன்றுக்கும் மேற்பட்ட விளைபொருட்களை விளைவித்தல்.
கடைசியாக விற்பனையையும் ஒரளவுக்கு முழுமையாகப் பெறுவது என 4 அடிப்படைகளைக் கொண்டது.
இயற்கையான புரிதல் தேவை (Mutual understanding)
குறிப்பாக ஒன்றை ஒன்று சார்ந்து வளரக்கூடியத் தன்மை கொண்ட பயிர்களைத் தேர்ந்தெடுத்து, விதைப்பதன் மூலம், அவற்றில் இயற்கையாகவே ஒரு புரிதல் ஏற்பட்டு ஒன்றுக்கு ஒன்று உதவி புரியும். எல்லா நேரங்களிலும் உதவிகரமாகவும் இருக்கும்.
இந்தப் புரிதலைத் தரைக்கு மேலேயும் பார்க்க முடியும். தரைக்கு கீழ் வேர் வழியாகவும் இந்த பயிர்கள் காட்டுகின்றன.
தமிழர் வோண்மை
தமிழர் வோண்மையில் இதுபோன்ற சார்புப்பயிர்கள், கூட்டுப்பயிர்கள், சுழற்சிப்பயிர்கள், தீவனப் பயிர்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, மிகச்சிறப்பாக இருக்கும் மண்ணின் வளத்தைப் உபயோகித்து இருக்கிறார்கள்.
இதுபோன்று பயிர்களை மாற்றி மாற்றி விளைவிப்பதன் மூலமாக அந்த சத்துக்களை, மீண்டும், மீண்டும் பல்கப் பெருக்க பல்வேறு யுக்திகள் உள்ளன. அதைத் தான் தற்போது நவீன தொழில்நுட்பத்திலும், Multi cropping, Companion cropping, Plant Cycling, Plant rotation, Fodder cropping என மேலை நாடுகள் முன்னிறுத்தி வோளாண்மையை மாற்றி அமைத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக நமக்குள் கணிசமான அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால், சமீப காலமாக முழுவீச்சில் விவசாயிகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
பிரதானப்பயிர்
தமிழகத்தைப் பொருத்தவரை, நெர் பயிர்தான் பிரதானப் பயிர். நெல் தனது வளர்ச்சிக்காக, மண்ணில் உள்ள சில சத்துக்களை உறிஞ்சு எடுத்துவிடும். இதைத்தொடர்ந்து, உளுந்து, நரிப்பயிர் போன்ற பயிர்களை பயிரிடுவார்கள்.
அப்போது, இந்த பயிர்கள், நெல் உறிஞ்சுகொண்ட நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களை (Nitrogen, phosphorus) மீண்டும் அண்டவெளியில் இருந்து மண்ணிற்கு கொண்டு வந்து சேர்த்துவிடுகின்றன.
இதில் புதிய யுக்தியாக, வேதாரண்யத்தைச் சேர்ந்த விவசாயிகள், நெல் பயிருடன் சணப்பு மற்றும் தக்கைப்பூண்டை ஊடுபயிராக சேர்த்தே விதைக்கிறார்கள்.
தக்கைப்பூண்டு
ஒரு முறை சணப்பு, மறு முறை தக்கைப்பூண்டு என்பதே அவர்களது தேர்வு. இதில் நெல் அறுவடை முடிந்த பிறகு, அந்த நிலத்தில் வளர்ந்துள்ள தக்கைப்பூண்டை அப்படியே மடக்கி உழுது, மண்ணுக்கு அதனை பசுந்தாள் உரமாக மாற்றிவிடுகிறார்கள்.
இதேபோல், தென்னைக்கு ஊடுபயிராக ஜாதிக்காயை பெருமளவில் பயிரிடுகிறார்கள். அடுத்த படியாக மல்பெரி நாற்றுகளைப் பயன்படுத்துகிறார்கள். மல்பெரியில் இருந்து பட்டுநூலும் எடுக்கிறார்கள். சில இடங்களில் அதனை கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயன்படுத்துகிறார்கள்.
சமீபத்திய யுக்தியென்று பார்த்தால், தென்னந்தோப்பில், தென்னை மரங்களுக்கு இடையில் முருங்கையையும் பயிரிட ஆரம்பித்திருக்கிறார்கள். அதைத்தவிர எலுமிச்சையையும், மரவள்ளிக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளையும், ஊடுபயிராக பயிரிட்டு பயனடையலாம்.
புதிய முயற்சி
திருவண்ணாமலை மாவட்டம் செங்சியைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர் எள் பயிருடன் அவுரிச்செடியையும் சேர்த்து விதைத்துவிடுகிறார். 15 நாள் கழித்து, நிலத்தில் ஆட்டை மேய விடுகிறார். ஆடு எள் செடியை மேயாது. ஆனால் அவுரிச்செடியை மேய்ந்துவிடும். இதனால், அந்த மண்ணில் மற்ற களைகள் முளைக்காத வகையில், அவுரிச்செடி அங்கு தன்னைத்தானே வேர்களை பரப்பிக்கொண்டிருக்கும். இதன்மூலம் களைஎடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும் களை எடுக்க ஆகும் செலவையும் கட்டுப்படுத்திக்கொள்ளலாம் என்பதற்காகவே இந்த முயற்சி.
திண்டுக்கல்லில் சில விவசாயிகள் எலுமிச்சைத் தோப்பில் மிளகாயை ஊடுபயிராகப் பயன்படுத்துகிறார்கள். அதேநேரத்தில், வெற்றிலையையும், அகத்தி மரத்தை நட்டு வளர்ப்பார்க்கள். இங்கு அகத்தி, வெற்றிலை இரண்டையுமே ஊடுபயிராகப் பயன்படுத்துவது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
உயரமான வளரும் தரங்களை வளர்த்து, சில்வர் உட்ஸ் (Silver wood)எனப்படும் மிளகை வளர்க்கலாம். இவ்வாறு ஊடுபயிரின் பயன்களையும், உன்னதத்தையும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
பல்லுயிர்ப் பெருக்கம்
இப்படி பல பயிர்களை விளைவிக்கும்போது, அந்த இடத்தில் பலவிதமான கால்நடைகளை வளர்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. அத்துடன் இயற்கையாகவே பல் உயிர்கள் வாழ, குறிப்பாக பழந்தின்னி புறவைகள், புழுத்தின்னி பறவைகள், புதுப்புது புழுக்கள், நன்மை செய்யும் புழுக்கள் என இதனை பல்லுயிர்ப் பெருக்கத் திணை என்றே சொல்லலாம். இதன் மூலம் பல் உயிர் மற்றும் பல் தாவரங்கள் சேர்ந்த சூழ்நிலையை உருவாக்கி, நமக்கு வாழ்வளித்த மண்ணிற்கும் கைமாறு செய்யலாம்.
தகவல்
திரு.கவுதமன் பாஸ்கரன்
சுங்குவார் சத்திரம்
இயற்கை விவசாய ஆர்வலர்
மேலும் படிக்க...
ஆசிரியர் தொழிலுடன் சேர்த்து, தினமும் 8 கிலோ சம்பங்கி பூ சாகுபடி செய்து அசத்தும் பெண் விவசாயி!
வருமானத்தைத் கொட்டித் தரும் காங்கிரீஜ் இன பசுக்கள்- பராமரிக்க எளிய வழிகள்!