1. வாழ்வும் நலமும்

மகத்துவம் நிறைந்த மண்பாண்டங்கள்!- மனம் திரும்பினால் ஆரோக்கியம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
The magnificence of pottery!
Credit: iStock

மாலை வேளையில் காற்று வாங்கக் கால்நடையாகச் சென்றால், சாலையோரங்களில் அழகழகான மண்பாண்டங்களை விற்பனைக்காக அடுக்கி வைத்திருப்பதைப் பார்க்கலாம். அவற்றில் அதிகம் விற்பனையாவது எது என்று கேட்டால் தண்ணீர் ஊற்றப் பயன்படுத்தப்படும் பானை என்பார்கள் வியாபாரிகள்.

மண்பாண்டங்கள்

உண்மை அதுதான். ஏனெனில், வெயில் காலங்களில், குளிர்ச்சியான தண்ணீரைக் குடிப்பதற்காக மட்டுமே பெரும்பாலானோர் மண்பாண்டங்களை வாங்கிச் சென்றுப் பயன்படுத்துகின்றனர்.

இருப்பினும் அன்றாடம் சமையலுக்கு மண்பாண்டங்களைப் பயன்படுத்துபவர்கள் சொற்பமே. அவ்வாறு நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், மண்பாண்டத்தின் மகத்துவத்தை இழக்கிறீர்கள் என்றே அர்த்தம்.

Credit: Wallpaperflare

அப்படி என்னதான் இருக்கிறது மண்பாண்டங்களில்? சில மகத்துவங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு.

ஆரோக்கியம் நிறைந்தது (Health)

நம் முன்னோர்கள்,  சமைக்க, சாப்பிட, நீர் அருந்த என அனைத்திற்கும் பெரும்பாலும் மண்பாண்டங்களையேப் பயன்படுத்தினர். இதன் காரணமாகவே அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், நோய்களுக்கு இடம்கொடுக்காமலும் வாழ்ந்தனர். பூமியில் இருந்து எடுக்கப்படும் மண்ணைக் கொண்டு தயாரிக்கும் மண்பாண்டங்களில் இயற்கையாகவே பல்வேறு வைட்டமின்கள் உள்ளன. அதில் B12 வைட்டமினும் அடங்கியுள்ளது.

கோடைக்கு ஏற்றது (Summer)

மண்பானையில் சிறு சிறு துவாரங்கள் இருக்கும். வெளியில் உள்ள வெப்பநிலை அதிகரிக்கும்போது, இந்த நுண்துவாரங்கள் வழியாக பானையின் வெப்பமும், தண்ணீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாவதன் மூலம் வெளியேற்றப்படுகிறது. அதனால்தான் மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீர் சில்லென்று குளிர்ச்சியாக இருக்கிறது. அவ்வாறு மண்பானையில் தண்ணீரைச் சேகரிக்கும்போது, வெட்டிவேர் போன்றவற்றை ஊறவைத்து, பின்பு வடிகட்டிக் குடிப்பது உடலுருக்கு நல்லது என்கிறது சித்த மருத்துவம்.

சமையலுக்கு உகந்தது

மண்பாண்டத்தில் சமைப்பதால், வெப்பம் சீராக பாத்திரம் முழுவதும் பரவுகிறது. மேலும், நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை மண்பாண்டங்களுக்கு இருப்பதால், உணவு சூடாகவே இருக்கும். அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போகாது.
 பாத்திரம் முழுவதும்  வெப்பம் மெதுவாகப் பரவுவதால், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே நிலைத்திருக்கின்றன. இதுவே மண்பாண்டத்தில் சமைக்கப்படும் உணவு கூடுதல் சுவையுடன் இருப்பதற்கு முக்கியக் காரணம்.

Credit:PNGitem

ஆல்கலைன் (Alkaline)

மண்பாண்டங்களில் ஆல்கலைன்கள்  நிறைந்துள்ளன. இவை தண்ணீரின் அமிலத்தன்மையோடு இணைந்து, உடலின் pH தன்மையை சமன் செய்கிறது. நீரில் அமிலத்தன்மை சமன் செய்யப்படுவதால், வாயுத்தொல்லைகள் நீங்கும்.

ஜீரணத்தைத் தூண்டுகிறது (Digest)

மண்பாண்டங்களில் சேமிக்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்துவது ஜீரண உறுப்புகள் சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. மேலும், தசைகள் வளர்ச்சி, எலும்புகள் மண்டலத்தை உறுதியாக்குதல் உள்ளிட்டவற்றுக்கு முக்கியக் காரணியாகச் செல்படும் டெஸ்டோஸ்டெரோன் (testosterone) அளவை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.

தொண்டை நோய்களைத் தீர்க்கிறது (Healing)

மண்பாண்டத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரைப் பருகுவது, சன் ஸ்டோக்கில் (Sunstroke) இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. மற்றொரு நன்மை என்னவென்றால், தொண்டையில் நோய் தொற்று உள்ளவர்கள் இதனைப் பருகுவதால், தொற்று நீங்கி குணமடைவர். வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் நம்மைத் தாக்காமல் இருக்க மண்பாண்டங்களே சிறந்தவை.

பலவித நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும் மண்பாண்டங்கள், கோடை காலத்திற்கு மட்டுமல்ல, எல்லா காலங்களுக்கும் ஏற்றது என்பதை  புரிந்துகொண்டு, அவற்றைப் பயன்படுத்துவதை நாம் அனைவரும் வழக்கமாக்கிக்கொள்வோம்.

மேலும் படிக்க... 

பொள்ளாச்சி இளநீரே!... இளநீரின் அசத்தல் பயன்கள்!

எருமைப்பாலில் எத்தனை நன்மைகள்! - தெரியுமா உங்களுக்கு?

English Summary: The magnificence of pottery! - Health is in your hands when the mind turns Published on: 02 August 2020, 06:41 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.