மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, மழைக்கால இழப்பீடாக வட்டியில்லாக் கடன் வழங்கப்படுவதாக இந்த மாநில அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் நிம்மதியைத் தெரிவித்துள்ளது.
கைகொடுக்கும்
மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கைப் பேரிடரால் விவசாயம் பாதிக்கப்படும்போது, பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்குக் கைகொடுத்தும் உதவும் வகையில், மத்திய- மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
முதலமைச்சர் அறிவிப்பு
அந்தவகையில் தற்போது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர பிரதேச அரசு.
நடப்பு ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரையிலானக் காலகட்டத்தில் பெய்த பருவமழையால், ஆந்திர விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, விவசாயிகளுக்கு வட்டி மானியம் மற்றும் வட்டியில்லாக் கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
ரூ200 கோடி
இதற்காக 8 .68 லட்சம் விவசாகிளின் வங்கிக்கணக்கில் 200 கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், விவசாயிகள் நலனில் தனது அரசு தனி அக்கறை செலுத்துவதாகவும் தெரிவித்தார். 45 ,998 விவசாயிகளின் விளைநிலங்கள், கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வின் மூலம் உறுதி செய்திருப்பதாகக்கூறினார்.
ரூ.40 கோடி
எனவே மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 2022ம் ஆண்டு காரீஃப் பருவம் முடிவதற்குள் 40 கோடி ரூபாய் செலுத்தப்படும் எனக் கூறினார். தொடர்ந்து 3-வது ஆண்டாக தமது அரசு விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கி வருவதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!