வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேலடுக்கு சுழற்சி (Upper Air Circulation)
இலங்கைக்கு கிழக்கே வளி மண்டல மேலடுக்கு சுழற்சி (Upper Air Circulation)நிலவுகிறது.
இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடலோரப்பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
வானிலை முன்னெச்சரிக்கை (Weather Forecast)
22.01.21
தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை (chennai)
-
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேக மூட்டத்துடன் காணப்படும்.
-
காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸையும், குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
வானிலை முன்னெச்சரிக்கை (Weather Forecast)
-
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டத்துடனும் காணப்படும்.
-
அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸையும், குறைந்த பட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவுமில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பசுமைக்குடில் அமைக்க ரூ.4.67 லட்சம் மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!
வேளாண் சட்டங்களை மாநில அரசுகளுக்கு பரிந்துரையாக அளிக்கலாம் –ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தல்!