Farm Info

Saturday, 27 August 2022 01:19 PM , by: Elavarse Sivakumar

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதபாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கீழடுக்கு சுழற்சி

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

31ம் தேதி வரை

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் இன்று முதல் 31-ந்தேதி வரை அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

கனமழை

திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

48 மணி நேரத்திற்கு

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும். இவ்வாறு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

தமிழக இளைஞர்களுக்கு வேலை- சென்னையில் சிறப்பு முகாம்!

வெறும் 750 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்கும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)